(ஹனீபா)
30 வருட கொடூர யூத்தத்தை ஒழித்து முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்களையூம் அச்சமின்றி சுபீட்சமான அபிவிருத்தியை நோக்கிய வாழ்வை பெற்றுத்தந்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி இரண்டாவது பதவியேற்று ஈராண்டு நிறைவூ மற்றும் ஜனாதிபதியின் 67வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி ஆரோக்கியமகவூம் அவரது ஆயூள் நீடிக்க வேண்டியூம்; விN~ட துஆ பிரார்த்தனை அட்டாளைச்சேனை உலமா சங்கத் தலைவர் யூ.எம். நியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரின் கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தௌபீக்இ கிழக்கு மாகாண வீதி அபிவிருத்த அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம். ஜஃபர்இ கலாச்சார உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். அம்ஜத்இ கலாச்சார திட்டமிடல் உத்தியோகத்தர்களான எம். ஜஃபர்இ டீ. றிம்சாத் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் உட்பட கிராம சேவகர்கள் உலமாக்கயூம் கல்விமான்கள்இ புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment