அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் தமிழ்மொழிமூல சமுர்த்தி முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள், புத்தகக்காப்பாளர்கள் ஆகியோருக்கு கணினி செயற்பாடு தொடர்பில் இருநாள் பயிற்சிநெறி நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.
இலங்கையில் நுண்நிதி நிறுவனங்களின் வரிசையில் இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் கீழியங்குகின்ற சமுர்த்தி வங்கிகள் பாரிய பங்களிப்பை செய்கின்றன. இந்நிலையில், சமுர்த்தி வங்கிகள் வருமானம் குறைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை குறைப்பதற்கான பங்களிப்பைச் செய்கின்றது. இவ்வாறு செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகளை நவீன முறையில் கணினி மயப்படுத்தி அதனூடாக மக்களுக்கு சிறந்த துரித சேவையை வழங்கும் நோக்குடன் இப்பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிநெறியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பு அஸ்வீன், கணினி நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் ஈ.சுகுமார் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment