இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2012

எம்பிலிபிட்டியவிலும் மீன் மழை: புளத்சிங்களவில் ஜெலி மழை?

VI

எம்பிலிபிட்டிய, சீய கனுவ கொடிகந்த பிரதேசத்திலும் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இம்மழை பெய்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்திளும் நேற்று பகல் வேளையில் மீன் மழை பெய்திருந்தது.
நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்திருந்தன.
அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப் படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கபட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகச் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் சிகப்பு மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இதுமட்டுமன்றி புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்தியாவின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மஞ்சள் நிறத்தில் மாவு போல மழை பெய்ததாகவும் இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா