இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/17/2012

மாத்தறையில் மீன் மழை!


(VI)மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இன்று பகல் வேளையில் மீன் மழை பெய்துள்ளதாக தெரியவருகின்றது.
நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்தாகவும் தற்போது அவற்றில் சில பரிசோதனைக்கென எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப் படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கபட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகச் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா