(ஹனீபா)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியீட்டலின் கீழ் தேசிய சமாதனப் பேரவையின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட கிராமிய புனர்வாழ்வு அமைப்பினால் (ட்றூவிஷன்) அட்டாளைச்சேனைப் பிரதேச சிறுவர் கழகங்களின் தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான தொடர் திறன் அபிவிருத்தி பயிற்சிப்பட்டறை நேற்று (23) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

'ட்றூவிஷன்'; அமைப்பின் தலைவர் உவைஸ் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ;ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஐ.எல். வஸீர்தீன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.எம். தல்ஹா, ஓய்வு பெற்ற முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஐ.எல். இப்றாலெப்பை ஐ.எல். உவைஸ் ஆகியோர்; வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
சமாதானத்தையும், நாகரீகமான சமூதாயத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய சமாதானப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்ட 08 மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கமையவாக அம்பாறை மாவட்டத்தில் மூவின சமூகங்கங்களும் வாழ்ந்து வரும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அட்டாளைச்செனை, ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, தீகவாப்பி ஆகிய கிராமங்களின் சிறுவர் கழகங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கான திறன்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இப் பயிற்சி பட்டறைகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டன.
இதன் போது சிறுவர் உரிமைகள், பரிந்துரைத்தல், தலைமைத்துவப் பயிற்சி, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலும் போன்ற தலைப்புக்களில் அனுபவுமும், துறைசார்ந்தவர்களையும் கொண்டு பயிற்சிகள் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன.

0 comments:
Post a Comment