இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/16/2013

அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் ரயில் விபத்தில் மரணம்!



(ஹனீபா)
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேரப் புகையிரதத்தில் மோதுண்டு சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மட் றக்கீப் (வயது -30);  என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சாய்ந்தமருது அம்மார் அச்சகத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று (14.01.2013) இரவு 9.45 மணியளவில் அலவ்வ வலக்கும்புர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த றக்கிபை பொல்கஹவல வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகினறது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா