இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/16/2013

"வறுமையற்றதோர் இலங்கை தேச" வேலைத்திட்டம்

(ஹனீபா)
2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள 'வறுமையற்றதோர் இலங்கை தேசம்' எனும் இலக்குடனான வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவான இல்லம்-வழமான நாடு எனும் செயற்பாடு தொடர்பாக பிரதேச செயலக மட்டத்தில் அலுவலர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டவர்களுக்கான விNஷட செயலமர்வு நேற்று மாலை (15) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை. சலீம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டார் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட திட்டப்பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பி.தாவூத் உட்பட நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா