அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் அக்கரைப்பற்று - 08 சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வங்கியின் தைப்பொங்கல் விழாவும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமுர்த்தி வங்கிக் கட்டிடத்தில் முகாமையாளர் ரீ.பரமானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (16) நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களும் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கே.நேசராஜா சமுர்த்தி முகாமையாளர் திருமதி அருந்ததி மகேஷ;வரன்; உதவி முகாமையாளர் வீ.சுகிர்தகுமார் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சங்கத் தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட திரிய பியச வீட்டு உரிமையாளர்களுக்கு மானிய கடன் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் திவிநெகும திட்டத்தை உருவாக்கி சமுர்த்தி பயனாளிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க நடைவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் தொழில் சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.






0 comments:
Post a Comment