இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/06/2013

நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் பயணம் செய்வதைத் தவிர்க்க கோரிக்கை


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டில் வலுப் பெற்றிருந்த காலநிலை தாழமுக்கமாக மாறியுள்ளதால் மாத்தறை ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மீன்பிடித்தல் மற்றும் பயணம் செய்தல் என்பவற்றினை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

வடமத்திய, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் தென்மாகாணம் போன்ற பாகங்களிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நேற்றுக் காலை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தற்போது வலுவடைந்து அமுக்கமாக மாறியுள்ளதுடன் நாட்டில் தென்கிழக்கில் நிலை கொண்டுள்ள இந்த தாழமுக்கம் நாட்டிலும் கடற்தரப்பிலும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் அதேவேளை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய காலநிலையும் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் ஏறாவூர், ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று, வவுணதீவு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, போரதீவுப்பற்று, மண்முனை, எருவில் பற்று, களுதாவளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. (Vi)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா