(ஹனீபா)
நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையை ஒரு தள வைத்திய சாலையாக தரமுயர்த்ததுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை விரைவில் நிறைவேற்றுவதற்குரிய துரித நடவடிக்கையினை மேற்கொள்வேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
நேற்று முந்தினம் (15 )நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலை தேசிய உற்பத்தி திறன் போட்டியில் 2010 – 2011 க்கான விருது பெற்றுக் கொண்டமையை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு வழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
வைத்திய சாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிரேஷ;ட விரிவுரையாளருமான ஏ.நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸீம், எம்.ரீ.ஹசன்அலி, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், உப தவிசாளர் எம்.எம்.எம்.அன்சார், பிரதேச செயலாளர் ரிபாஉம்மாஜலீல், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை, மாவட்ட வைத்திய அதிகாரி எம்.பி.எம்.மாஹிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தேசிய உற்பத்தி திறன் பொட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள 123 வைத்திய சாலைகளில் நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலை விருதுக்கு தகுதி பெற்றமை பாராட்டுக்குரிய விடயமாகும் இதற்காக உழைத்த வைத்திய அதிகாரி டாக்டர் மாஹிர் உட்பட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியினையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் இவ் வைற்றிக்காக உழைத்த வைத்திய அதிகாரி எம்.பி.எம்.மாஹிர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வின்போது வைத்திய சாலைக்கான இணையத்தளத்தையும் முதலமைசர் ஆரம்பித்து வைத்ததுடன் விசேட தேவையுடைய 20 பேருக்கு சக்கர நாற்காலி என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகல்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களால் முதலமைச்சருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி கைளரவித்தார்.










0 comments:
Post a Comment