இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/17/2013

திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் அலுவலர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் செயலமர்வு

(ஹனீபா)
திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 'வறுமையற்றதோர் இலங்கை தேசம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவான இல்லம்-வழமான நாடு எனும் செயற்பாடு தொடர்பாக பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்க அலுவலர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் விNஷட செயலமர்வு இன்று வியாழன் மாலை (17) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இவ் வேலைத்திட்டம் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டார் அத்துடன் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்குமாகாண சபை உறுப்பினாகளான் எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் அம்பாறை மாவட்ட திட்டப்பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், அமைச்சரின் இணைப்பாளர்கள் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா