இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/28/2013

அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்துக்கான சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம்


(ஹனீபா)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசத்துக்கான சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் இணைப்பதிகாரி ஏ.பி.தாவூத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.ஐ.நயீம், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹசன், பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம்.அசீம் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில்பாதுகாப்புகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா