(ஹனீபா)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை -02ம் பிரிவு புதுநகரத்தைச் சேர்ந்த ஆட்டோ சாரதி சீனித்தம்பி பிரேமநாதன் வயது -39 என்ற குடும்பஸ்த்தர் மல்வத்தை மல்லிகைத்தீவு மயானத்துக்கு அருகில் இன்று (28) காலை கழுத்து மற்றும் கைவில்களில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று குழந்தைகளின் தந்தையான இவர் இரவு 8.00 மணியளவில் வீட்டில் இருக்கும் பொது தொலைபேசி அழைப்பென்றின் மூலம் ஆட்டோ ஹயர் ஒன்றுக்காக மல்லிகைத்தீவுக் கிராமத்துக்க வருமாறு அழைக்கப்பட்டதை அடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்த சமயமே திட்டமிட்ட முறையில் இவரை ஆட்டோவில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுண்டவரின் கைவரல்கள் வெட்டப்பட்டு கையில் கிடந்த மோதிரம் மற்றும் அவரிடமிருந்த கையடக்க தொலைபேசி, பேஸ் என்பவற்றை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுண்டவரின் சடலம் பிரேதப் பரீசோதனைக்காக அம்பாறை போதனாவைத்திய சலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.






0 comments:
Post a Comment