இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/21/2013

சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்கான கூட்டம் Photos

(ஹனீபா)
ஆலையடி வேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரதேசத்துக்கான சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்கான கூட்டம் நேற்று (20) மாலை கிராம உத்தியோகத்தர் ஆர்.கோகுல்ராஜ் தலைமையில் கிராம எழுச்சி கட்டடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களின் செயலாளர் ரீ.ஜெயாகர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.எச்.காஜாமுஹிதீன்  பிரதேசசபை உப தவிசாளர் சியாம் சுந்தர்  சிவில்பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர் அப்துல்லா உட்பட பொது மக்கள் பலர்; கலந்து கொண்டனர்.

இதன்போது சிவில் பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டதுடன் புதிய நிருவாகத்தெரிவும் இடம்பெற்றது.அத்துடன் இந்தப் பிரதேச மக்களுடைய வேண்டுகோளுக்கு அமைவாக அவர்களின்; குடி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான இரு தண்ணீர் தாங்கிகள் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என பாரளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களின் செயலாளர் ரீ.ஜெயாகர் உறுதியளித்தார்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா