இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2014

உழவர் திரு நாளை முன்னிட்டு சிறி மகா பெரிய தம்பிரான் ஆலையத்தில் பூசை நிகழ்வு

(ஹனீபா)
உழவர் திருநாளாம் தைத் திருநாளையிட்டு ஜனாதிபதிக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லாசி வேண்டி அக்கரைப்பற்று சிறி மகா பெரிய தம்பிரான் ஆலையத்தில் ஆலைய பிரதம குரு எஸ்.குவேந்திரராஜா தலைமையில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
»»  read more

1/13/2014

பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் முக்கிய அறிவிப்பு


(ஹனீபா)
இந்தப்படத்தில் காணப்படுகின்ற குமார என்று அழைக்கப்படும் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நீதுவ ஹென்றி சுமித் ரஞ்சன் என்பவர் என்னுடைய செயலாளராக ஒரு போதும் இருந்ததில்லை அவர் என்னுடைய செயலாளர் இல்லை என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன உறுதியாக கூறுகின்றார் .

அதுமாத்திரமன்றி குறித்த நபர் என்னுடைய பாராளுமன்ற ஆளணியில் உத்தியோக பூர்வமாக ஒரு சிற்றுனியராக கூட நியமிக்க வில்லை எனவும் இவர் பொன்ற மோசடிக்கார்களிடமிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக அவதானமாகவும் இருக்குமாறும் அவர் தெரிவித்தார்.
»»  read more

விவசாய உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நீத்தைஆறு வடகண்ட கமக்காரர் அமைப்பின் வேண்டுகோளுன் பேரில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) மாலை பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் நடைபெற்றது.

நீத்தைஆறு வடகண்ட கமக்காரர் அமைப்பின் செயலாளர் என்.இராசதுரை தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்து கொண்டு விவசாய உபகரனங்களை வழங்கி வைத்தார் இந்த வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



»»  read more

11/13/2013

இரண்டு மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி


-ஹனீபா

தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நற்பிட்டிமுனை-02ம் பிரிவிலுள்ள கிணற்றடி வீதி இரண்டு மில்லியன்; ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் திங்கட் கிழமை நேற்று (11) மாலை இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது பத்து இலட்சம் ரூபா செலவில் இவ் வீதியில் அமைக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட்டத்தினையும் பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.லவநாதன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இராஜ குலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில்
 இவ்வேலைத்திட்டத்திற்கு மொத்தமாக மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


»»  read more

3/26/2013

மத்திய கலாசார நிலைய திறப்பு விழா (படங்கள்)

(ஹனீபா)
கலை மற்றும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகளினூடாக இனங்களிடையே இன உறவையும் ஒற்றுமையையும் ஏற்படத்த முடியும் அது நீண்டகால இன சௌஷன்யத்துக்கும் வழிவகுக்கும் என கலை மற்றும் கலாசார அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க (25.03.2013) மாலை தெரிவித்தார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அவர்களின் முயற்சியினால் கலை மற்றும் கலாசார அமைச்சின் 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட மத்திய கலாசார நிலையக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு;  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த கால யுத்தம் காரணமாக இனங்களிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து இன்று இந்த இடத்திலே நடைபெறுகின்ற இந்த திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் சகல இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஷ;தவ ஆராதனைகளுடன் நடைபெற்றதை நினைக்கின்ற போது மிகவும் சந்தேசமடைகின்றேன்.
எனவேதான் கலை கலாசார நிகழ்வுகளினூடாக இன உறவையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும் அதற்கு முன்னுதாரணமே இன்றைய நிகழ்வுகளாகும்.
நாட்டில் கலை கலாசார பாரம்பரியங்களையும், இன உறவையும்  வளர்க்கும் நோக்குடன் ஜனாதிபதி அவர்களின் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் 160 கலாசார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கலாசார நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

மேலும் பல கலாசார மத்திய நிலையங்கள் இந்த மாவட்டத்தில்  அமைக்கப்படவுள்ளது அதில் எமது பாராளுமன்ற உறப்பினர் பியசேன அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக நாவிதன் வெளி, ஆலையடிவேம்பு, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் மேலும் புதிய கலாசார நிலையங்களை ஆரம்பிப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப வேலை எதிவரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  பி.எச்.பியசேன, கலை மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்கா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் ரீ.நவரெட்னராஜா, ஜனாதிபதி இணைப்பாளர் கே.புஷ;பகுமார்(இணியபாரதி), உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

»»  read more

3/14/2013

ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர்தினவிழா

(ஹனீபா)
குடும்பத்தை பாதுகாக்கின்ற பெண்களை நாம் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில்' ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர்தினவிழா (13.03.2013) மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிபாயா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச.;பியசேன அவர்களின் செயலாளர் ரீ.ஜெயாகர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபைராஜா உட்பட கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் மனிதன் உளரீதியாக அபிவிருத்தி அடையாமையே பெண்கள் இன்னும் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றமைக்கு காரணமாக அமைகின்றது எனத் தெரிவித்தார்.


»»  read more

2/01/2013

மகளீர் சங்கங்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் Photos

(ஹனீபா)
மகளீர் மற்றும் மகளீர் அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு இன்று (01) ஆலையடி வேம்பு பிரதேச செயலக  நவரெட்ணராஜா அரங்கில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்; தலைமையில் நடைபெற்றது.
காலத்திற்கேற்ப பெண்களின் முக்கியத்துவம் எனும் தொனிப்பொருளில் அமைந்த இச்செயலமர்வில் நாடளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபைராஜா பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எப்..சிபானா, விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.தௌபீக் இளைஞர் சேவை உத்தியோகத்தர் வி.நடனகுமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவிச்சந்திரன் உட்பட பல வளவாளர்களும் பெண்கள்சார் அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


»»  read more

கோளாவில் பகுதியில் தையல்பயிற்சி நிலையம், உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பு


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் கோளாவில் -2ம் பிரிவுக்கான சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கோளாவில் பிரதேச மக்களின் நன்மை கருதி பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி மூலம் நிறுவப்பட்ட தையல் பயிற்சி நிலையம் மற்றும் உடற் பயிற்சிக் கூடம் (ஜிம்) என்பன திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (31) மாலை கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி சரோஜா தெய்வ நாயகம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவருமான பீ.எச்.பியசேன கலந்த கொண்டார். கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர், கணக்காளர் கே.கணகரத்தினம் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



»»  read more

1/16/2013

சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் அக்கரைப்பற்று - 08 சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வங்கியின் தைப்பொங்கல் விழாவும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமுர்த்தி வங்கிக் கட்டிடத்தில் முகாமையாளர் ரீ.பரமானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (16) நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட  பாரளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களும் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கே.நேசராஜா சமுர்த்தி முகாமையாளர் திருமதி அருந்ததி மகேஷ;வரன்; உதவி முகாமையாளர் வீ.சுகிர்தகுமார் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி  சங்கத் தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட திரிய பியச வீட்டு உரிமையாளர்களுக்கு மானிய கடன் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் திவிநெகும திட்டத்தை உருவாக்கி சமுர்த்தி பயனாளிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க நடைவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் தொழில் சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.


»»  read more

1/05/2013

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 300 பேர் இணைவு

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் கோளாவில், அலிக்கம்பை (தேவர் கிராமம்), பணங்காடு, கண்ணகி புரம், இத்தியடி, ஆலையடி வேம்பு, சின்னமுகத்துவாரம்,  தீவுக் கலை, அக்கரைப்பற்று 08,09ம் பிரிவு களைச் சேர்ந்த ஆழ்கடல் மற்றும் நந்நீர் மீன்பிடித் தொழிலாளர்கள் 250 பேர் நேற்று மாலை (04) சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன முன்னிலையில் இணைந்து கொண்டனர்.

ஆலையடி வேம்பு கலாசார மண்டபத்தில்  மீனவர் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஐ.துரைராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, ஆலையடி பிரதேச கடல்தொழில் பரிசோதகர் என்.கந்தசாமி, பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் உட்பட பலர் கலந்து கெண்டனர்.


»»  read more

30 குடும்பங்களுக்கு நுண்கடன் உதவிகள் வழங்கி வைப்பு

(ஹனீபா)
தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 
குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான நுண்கடன் உதவிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.


திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் வீ.அரசரத்தினம் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, நிhவாக உத்தியோகத்தர் கனகரத்தினம், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர், சமுர்த்தி முகாமையாளர்களான எச்.அப்துல் அலீம், எம்.கமல பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் 30 குடும்பங்களுக்கு இக்கடன் வழங்கப்பட்டன.

»»  read more

1/04/2013

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வைபவம்

(ஹனீபா)
அண்மைக்காலமாக பெய்து வருகின்ற மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவூக்குட்பட்டமக்களுக்கு டென்மார்கிலுள்ள அன்னை அறக்கட்டளை நிலையத்தின் அனுசரனையூடன்  பிறைட் பியூ+ச்சர் நேசக்கரம் அமைப்பினால் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வூ (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகப் பராமரிப்பு நிலைய கட்டிடத்தில் அமைப்பின் உபதலைவர் யூ..உதயகாந் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்; உதவூம் கரங்கள் அமைப்பின் தலைவருமான பீ.எச்.பியசேனஇ ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன்இ பிறைட் பியூ+ச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளா; ஜனனன்இ பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளா; ரீ.ஜெயாகா;இ பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகமார் உட்பட கிராம உத்தியோகத்தா;கள் பட்டதாரிப் பயிலுனர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

»»  read more

12/24/2012

தேசிய மட்ட கலாசார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப்  பிரிவிலிருந்து தேசிய மட்ட கலாசார போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான நினைவூச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வூ இன்று (24) திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இளைஞர் சேவை அதிகாரி எம்.எச்.எம்.பாறுக் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டாh;. கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளா; கலாநிதி எம்.கோபாலரத்தினம்இ திரக்கோவில் பிரதேச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சின்னத்தம்பி விக்னேஸ்வரன்இ பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர்இ மாவட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகுமார். உதவித் திட்டமிடல் பணிப்பாளர் என்.நவிதரன்இ பயிற்சி ஆசிரியர் திருமதி தேவமலர் தங்கமாணிக்கம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பிரதம அதிதி வெற்றிக் கேடயத்தை பயிற்சி வழங்கிய ஆசிரியை திருமதி தேவமலா; தங்கமாணிக்கத்திடம் வழங்கி வைத்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையூம் வழங்கி வைத்தார்.


»»  read more

12/22/2012

கல்வி அபிவிரித்தி தொடர்பான கூட்டம்

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவூக்குட்பட்ட மண்டானை எனும் குடியேற்ற கிராமத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவூம் அங்கு புதிய பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவூம் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம மட்ட கலந்துறையாடல் கூட்டம் இன்று (22) மண்டானை பல்தேவைக்கட்டிடத்தில் திருக்கோவில் பிரதேச சிறி;லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும். பிரதேச சபை உறுப்பினருமான சின்னத்தம்பி விக்னே~;வரன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த சுனாமி அனா;த்தத்தனால் பாதிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியினால் வீடுகள் அமைத்து குடியேற்றப்பட்டு தற்போது 252 குடும்பங்கள் வசித்து வருகின்றனா இக்குடும்பங்களின் 155க்கு மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலை செல்பவர்களாகும்.

இவா;கள் மிக நீண்ட துhரம் பயணம் செய்து திருக்கோவில் பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர் துhரம் தமது பொருளாதார க~;டம் காரனமாக கூடுதலான மாணவர்கள் கல்விகற்கின்ற வயதில் பாடசாலையை விட்டு இடைவிலகியூள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரதேச மக்களினால் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இப்பிரதேசத்தில் 02.01.2013ம் ஆண்டில் புதிய பாடசாலை ஒன்றை இந்த பல்தேவைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்படும் அதற்கான சகல நடவடிக்கைகளையூம் கல்வியமைச்சுடன் பேசி தான் மேற்கொள்வதாகவூம் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினார்பி.எச்.பியசேன தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனஇ செயலாளர் ரீ.ஜெயாகா;இ முன்னாள் கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் பொதுசன தொர்பு அதிகாரியூம் பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.நந்தகுமாh; உட்பட பலா; கலந்து கொண்டனர்.


»»  read more

12/16/2012

அக்கரைப்பற்று ஆர்.கே.எம் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

(ஹனீபா)
தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய ஆய்வூ கூடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வூ இன்று (15) அதிபர் திருமதி லோகநாயகி கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினா; பி.எச்.பியசேன கலந்து கொண்டார் ஏனைய அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.குணபாலன்இ திருநாவூக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.ராசமாணிக்கம்இ கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் வீ.கணகரத்தினம் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவூள்ள இக்கட்டிடம் இரண்டு மாடிகளை கொண்டதாக அமைக்கப்படவூள்ளதாகவூம் தெரிவிக்கப்பட்டன.


»»  read more

12/01/2012

மல்வத்தையில் சீருடை துணி வழங்கும் வைபவம்

(ஹனீபா)
சம்மாந்துறை வலயக் கல்விஅலுவலகப் பிரிவூக்குட்பட்ட மல்வத்தை கமுஃசதுஃவிபுலானந்தா மகா வித்தியாலயத்தில 2013 ஆம் ஆண்டுக்கான இலவசப் பாடசாலைச் சீருடை துணி வழங்கும் வைபவம்  நேற்று (30) வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் பி.கோணேசமுர்த்தி தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேயனஇமற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டீ.ஜெயாகர்இ ஆசிhpயா;களஇ மாணவர்கள்இ பெற்றௌர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இவ்வருடம் தரம் 5ஆம்  ஆண்டு புலமைப் பரீச்சையில் சித்தியடைந்த மற்றும் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் நினைவூச்சின்னம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

»»  read more

11/26/2012

ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு தொழிற்துறையினை ஊக்குவிப்பு நிகழ்வு

(ஹனீபா)
தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு தொழிற்துறையினை ஊக்குவிக்கம் நோக்குடன் ஆலையடி வேம்பு பிரதேசத்தை சோ;ந்த யூவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 05 நாள் தையல் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வூ இன்று (26) ஆலையடி வேம்பு சமுக பராமரிப்பு நிலையத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில்; பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்த கொண்டார் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வீ.ஜெயாகர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்; உட்பட பயிற்சியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா