இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/26/2013

கல்முனைப்பிரதேசத்தில் உடகவியலாளர் ஒருவருக்க அச்சுருத்தல்


-ஹனீபா-
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்த அரசியல் வாதியின் செயலாளர் எனக்கூறி தொலைபேசியில் இருந்து மாலை 5.50 மணிக்கு கல்முனையை சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸான் என்பவர் அச்சுருத்தப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (25) அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த அடைமழையினால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த கல்முனைப் பிரதேசத்திலுள்ள வீதிகளையும் வீடுகளையும் படம் பிடித்து செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது அப்பிரதேசத்தில் நின்றிருந்த குறித்த அரசியல் பிரமுகரின் ஆதரவாளரும் குறித்த ஊடகவியலாளரும் கல்முனைப் பிரதேசத்தின் வீதிகளின் நிலமைகள் தொடர்பாக எதிர்காலத்தில் திட்டமிட்டு செயற்படுத்தா விட்டால் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு எடுத்துக் கூறுங்கள் எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

ஊடகவியலாளர் றம்ஸான் தனது வீடு சென்று சேகரித்த செய்திகளை செய்தி நிருவனங்களுக்க அனுப்பப் பட்டு அவை சில இணையத்தளங்களில் பிரசுரமாகியும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

பின்னர் நேற்று மாலை 5.50 மணியளவில் தொலைபோசியிலிருந்து மேற்குறித்த நபரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தகாத வார்த்தை பிரயேகங்களால் திட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஊடகவியலாளர் றம்ஸான் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார் அதனைஅடுத்து பொலிஸார் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மைகளை உலகறியச் செய்யும் ஊடகவியலாளர்களின் சேவைகளை வரவேற்பதை விடுத்து அச்சுருத்துவது என்பது கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா