
ரிசானா நபீக்கின் சடலத்தை கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது என வெளிநாட்டு அமைச்சின் ஊடக பேச்சாளராக சரத் திசாநாயக்க தெரிவித்தார்.
எனினும் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.
குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிற்கு நேற்று புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
0 comments:
Post a Comment