
தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும்
விடாமுயற்சியுடனும் கற்றேனென மிகவும் உருக்கமாக தெரிவித்தார் அவர். இது
தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
யாழ். மாவட்டத்தில் என்னைப் போன்ற விசேட திறமையுள்ள மாணவர்களுக்கு கற்றலை
தொடர்வதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. சாதாரண மாணவர்களுடன்
ஒப்பிடும்போது எமக்கு விசேட வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தர உரிய
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது 9 வயதில் இரு கண்பார்வையையும் முற்றாக இழந்து விட்டேன். ஆனால்
நம்பிக்கையை நான் இழக்கவில்லை. வாழ்வகத்தின் உதவியுடன் தெல்லிப்பழை யூனியன்
கல்லூரியில் கண்பார்வையுள்ள சாதாரண மாணவர்களுடனேயே கற்றேன்.
எனது விடாமுயற்சிக்கு ஆசிரியர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன் என்றார்.
0 comments:
Post a Comment