(ஹனீபா)
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பித்து வைத்தல் மற்றும் புதிய கட்டடத் தொகுதியையும் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 05ம் திகதி வருகை தரவிருப்பதனை முன்னிட்டு ஜந்து நாட்களுக்குள் ஒரு கிலோமீற்றர் வீதியை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவாளர் எச். அப்துல் சத்தார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பொறியயாளர் ஏ.எம். றியாஸ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று வரும் அபிவிருத்தி வேலைகளையும் பார்வையிட்டதுடன் அவகளையும் துரிதமாக மேற்கொள்வதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment