(ஹனீபா)
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை (05) நடைபெற்ற முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன், 600 மில்லியன் ரூபா செலவில் குவைத் அரசினால் நிர்மாணிக்கப்பட்டடுள்ள 700 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக்கட்டிடம் அடங்கலாக நிர்வாக மற்றும் விரிவுரை மண்டபக் கட்டிடத்தினை திறந்து வைத்தல், மற்றும் குவைத் இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலியுறுத்தும் நினைவுத்தூபி என்பனவும் திறந்து வைக்கப்பட்டது.
பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; வேந்தர் இஷ;ஹாக், அமைச்சர்களான எஸ்.பி திசாநாயக்க, ஏ.எல்.எம்.அதாஉல்லா, பி.தயாரத்னா, றவூப் ஹக்கீம், முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்,ஆளுனர் மொஹான் விஜய விக்ரம,குவைத் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெஷான் அல் வக்காயன் மற்றும் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.ஐ.எம்.மன்சூர், விமலவீர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சிரியாணி, பீ.எச்.பியசேன, கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜயந்த நவரத்ன உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், கல்விமான்கள்,உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது குவைத் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெஷான் அல் வக்காயன் அவர்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நிணைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன அத்துடன் உபவேந்தர் அவர்களால் உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க மற்றும் குவைத் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹெஷான் அல் வக்காயன் ஆகியோருக்கும் நிணைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment