இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/27/2013

உலகில் உண்ணதமான குழந்தைப் பாக்கியத்துக்காய் ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கான இலவச மருத்துவ முகாம்


(Jananam RCOSL)
சென்னை ஜனனம் கருத்தரிப்பு நிலையத்தின் இலங்கை ஒன்றிணைப்பு மையம் இரண்டாவது தடவையாகஇ நம் நாட்டில் குழந்தைப் பேறில்லாத தம்பதிகளுக்காக ஏற்பாடு செய்திருக்கும் மருத்துவ முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெற உள்ளன.

BIOCHEM Laboratories
3/4,  New Colombo Rd
Mawanella 
30.06.2013 ஞாயிறு
காலை 7.45 முதல் 
பதிவுகளுக்கு
0773693633 அல்லது 0772772201

Darul Iman
Jamath-e-Islami Centre
Eravur 01
29.06.2013 சனிக் கிழமை
காலை 9.00 முதல்
பதிவுகளுக்கு
0773148023 அல்லது 0775150134




தனியாள் மருத்துவ சோதனை

மருத்துவ ஆலோசனைகள்இ வழிகாட்டல்கள்இ பரிசோதனை முறைகள் பற்றி விளக்குகிறார் இத்துறைக்கேயுரிய இந்திய வைத்திய நிபுணர்


Dr. Vani Sundarapandian
MD DGO MRCOG (UK) and Master of Reproductive Medicine (Australia)
The lead consultant and Fertility Specialist and Director of the Jananam fertility centre –Chennai.


மட்டுப்படுத்தப்பட்ட தம்பதிகளே அனுமதிக்கப்பட உள்ளதால் மேலுள்ள  இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முன்கூட்டியே தங்கள் பதிவுகளை செய்துகொள்ளுங்கள்.


Medical Director - Jananam
Dr. Mujahida Ibrahim - MBBS (Pakistan), MSc (UK)
SLMC Reg. No: 14804


»»  read more

4/24/2013

அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை


அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை
»»  read more

3/16/2013

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்னையா?

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது. என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் இதோ சில டிப்ஸ்…


* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.

* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.

* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.
»»  read more

3/09/2013

மழைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளும் தொற்று நோய்களும்

இன்று நாடளாவிய ரீதியில் மழையும் வெள்ளமும்  மண்சரிவுகளும்  இடிமின்னலும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அது மாத்திரமல்ல அதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும்  துன்பங்களுக்கும் சொல்லொனா துயரங்களுக்கும் உயிர் ஆபத்துக்களுக்கும் முகம் கொடுப்பதுடன் மாத்திரமல்ல சில பகுதிகளில்  மக்கள் அகதிகளாகவும் வாழ்ந்து  வருகின்றனர். இவ்வாறான நிலமைகள் உருவாகுவதற்கு முன்பே நாம் இதுபற்றி  சிந்தித்து சில முக்கியமான விடயங்களுக்கு மாத்திரமாவது  சிறந்த தீர்வுகளைத்தெரிவு செய்திருக்க வேண்டும். (மாற்று வழிகளைத்) தெரிந்து செயற்பட்டிருக்க ருக்கவும்  வேண்டும்.
 
இப்பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் ? என்று அறியாமல் தடுமாறும் மக்கள் அதிகம். அவ்வாறானவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்குவது எம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். இதன் அடிப்படையில்தான்; இக்கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
                             
பெய்யும் மழை நீர் சுத்தம் என்றாலும்  அது பூமியை அல்லது நிலத்தை வந்தடைந்ததும் அந்நீர் அசுத்தம் அடைந்துவிடுகிறது. சிலர் இந்நீர் சுத்தமானது எனகருதி பல்வேறு  முறையில் பாவித்து வருவதுடன் அதனால் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே இதுபற்றி நாம் ஒவ்வொருவரும் சில விளக்கங்களை அறிந்திருப்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அறவே நீரில்லாத மிகவும் நீர்த்தட்டுப்பாடான பகுதிகளில் நன்றாக நீரைகொதிக்க வைத்து பாவிக்கலாம். முடியுமான அளவில் பருகுவதற்கு சுத்தமான சிறந்த நீரையே பாவிக்க முயற்சிக்க வேண்டும். “குளோரின்”; எனும் இரசாயணப்பொருளைப் பாவித்தாலும் இதனால் 65% வீதமளவில் தான் கிருமிகள் அழிக்கப் படுகின்றது. எனவே கொதித்தாறிpய நீரே 100% சுத்தமானது என்பதை மக்கள் அறிந்து மனதில் பதித்து கொள்ளல்  வேண்டும். இவ்வாறான சூழலில் எம்மத்தியில் ஏற்படும் முக்கியமான சில பிரச்சினைகள்  என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பவற்றைப் பற்றி சற்று சிந்தித்துப்பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.  விஷேடமாக இ 
 
 
(01) – வெள்ளம் ஏற்படும்போது பரவலாக ஏற்படும் (பரவும் )நோய்கள்.
(02) - மண் சரிவுத் தாக்கம்.
(03) - இடிமின்னல் பாதிப்பு.

 
1- வெள்ளம் ஏற்படும்போது பரவலாக ஏற்படும்
(பரவும்) நோய்கள்.
 
(01) வெள்ள நீரைப் பருகுவதனால் ஏற்படும்  நோய்கள்:-

வயிற்றோட்டம் - இரத்தம் கலந்த வயிற்றோட்டம்.
அமீபாக்களால் ஏற்படும் வயிற்று நோய்.
மூளைக்காய்ச்சல்.
வாந்திபேதி.
செங்கமாரி.
இளம்பிள்ளைவாதம்
தைபொயிட்டுக்காய்ச்சல். போன்றவைகளை விஷேடமாகக் குறிப்பிடலாம்.
 

இந்நோய்களிலிருந்து பாதுகாப்புப்பெற
நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் :-
 
எப்பொழுதும் கொதித்து ஆறிய நீரையே பருக வேண்டும்.
எப்பொழுதும் உணவு சமைப்பதற்கு உண்பதற்கு முன்பும் மலசல கூடம் சென்று வந்த பின்பும் சவர்க்காரமிட்டு இருகைகளையும் கழுவிக்கொள்ள வேண்டும்.
எல்லாச்சந்தர்ப்பங்களிளும் வீட்டலேயே சமைத்த உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.
எல்லாச்சந்தர்ப்பங்களிளும் சமைத்த உணவுகளை உடனேயே உண்ண வேண்டும். ஈக்கள் மொய்க்காது உணவை மூடி பாதுகாத்து வைக்க வேண்டும்.
எப்பொழுதும் மலம் கழிப்பதற்காக மலசலகூடமொன்றைப் பாவிக்கவேண்டும். சிறுபிள்ளைகளின் மலத்தை மலசலகூடத்தில் போடப்படவேண்டும்.
பழங்களை சுத்தமான நீரில் நன்றாகக் கழுவியும்  கீரை வகைகளை நன்றாகக் கழுவிச் சமைத்தும் உண்ணவேண்டும்.
பாடசாலைகளுக்குச்செல்லும் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கொதித்தாறிய நீரை சுத்தமான புட்டியொன்றில் கொடுத்தனுப்ப வேண்டும்.
பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட  உணவுகளையே கொண்டு செல்வதற்கு உற்சாகமளிக்கப்பட  வேண்டும்.
வீதியோரங்களில் விற்கப்படும் உணவுகளையும்  ஐஸ்பெக்கட்  ஐஸ்கிரீம்  போன்ற உணவுகளையும் வாங்கி உண்ண வேண்டாம். என பிள்ளைகளுக்கு அறிவுறை கூறவும். (இந்நடவடிக்கைகள் மாரி காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் கடைபிடித்தல் மிகவும் சிறந்த பழக்கமாகும் என அறிவுரை வழங்குங்கள்.) 
மேலும் கடைகளில் திறந்து விற்கப்படும் உணவுப்பொருட்கள் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஈக்கள் உண்டாகாமல் இருப்பதற்கு (பெருகாமல் இருப்பதற்கு) குப்பைகளை உரிய முறையில் அகற்றிவிட வேண்டும்.

(02) அசுத்தமான நீரினால்
        உணவுகளைத் தயாரிப்பதனாலும்  ஆடைகளைக் கழுவுவதனாலும்
        ஏற்படும் நோய்கள் :-
 
கண்நோய்.
சொறி. (ஸ்கேபீஸ்). 
மேலும் சில தொற்று நோய்கள்.      போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
 
இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு:-

உடைகளை சுத்தமான நீரில் கழுவி வெயிலில் காய வைத்து இ அல்லது அயன் செய்து அணிய வேண்டும்.
நோய்களிலிருந்து  பாதுகாப்புப் பெற மேற்குறிப்பிட்ட சுகாதார பழக்க வழக்கங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(03) நீரில் செறிந்துள்ள 
       ஒட்டுண்ணிகளினால் ஏற்படும் நோய்கள். 
 
-நுளம்பினால் பரவும் நோய்கள்.
-யானைக்கால் நோய்.
- மலேரியா.  
-டெங்கு.   போன்றவைகளை விஷேடமாகக்; குறிப்பிடலாம்.
 
இந்நோய்களிலிருந்து பாதுகாப்பப் பெறுவதற்கு:-
 
சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காமல் நீரை ஓடச்செய்து விட வேண்டும்.
டெங்கு போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளச்செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்திக்கொள்வது அவசியமாகும். 
 
மேலும் இந்நோய் தடுப்புச் சம்பந்தப்பட்ட (தடை நடவடிக்கைகளை) மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களை அனுகி மேலதிகமாக அவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

(04) சுகாதாரக் குறைவினால் ஏற்படும்
       புழு நோய்கள் :-
 
கொக்கிப்புழு அல்லது கொழுக்கிப்புழு நோய்.                                               
வட்டப்புழு. நோய்
தட்டைப்புழு நோய்.                                                  
சொறிப்புழு. நோய் 
நுண்ணிய வெண்புழு நோய் . போன்றவைகளைக் குறிப்பிடலாம். 
 
இந்நோயிலிருந்து பாதுகாப்பப்பெறுவதற்கு:-
- வெளியில் செல்லும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாதணிகள் அணிந்து கொள்ள வேண்டும்.
 
-புழு நோய்க்கான மருந்துவகைகளை வைத்தியரின் ஆலோசனைப்படி பாவித்துக்கொள்ள வேண்டும். 
அத்துடன்  மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் “தன் சுத்தம்” நடவடிக்கைகளை  அவசியமாகப்          
பேணிக்கொள்ளல் வேண்டும்.
 
(02) – மண் சரிவுத் தாக்கம்

    மழை பெய்யும் காலங்களில் எதிர்பாரா விதமாக திடீரென  நாம் வாழும் வீட்டுச் சூழலில் மண்சரிவு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவ்விடத்திலிருந்து அத்தியவசியமான பொருட்களை (மருந்து வகைகள் ணம்,  
 
அத்தியவசியமான கடிதங்கள்,  கையில் எடுத்துச்செல்ல முடியுமான மிகவும் அவசியமான பொருட்களை மாத்திரம்  ) எடுத்துக்கொண்டு தாமதியாமல் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடவேண்டும். 
     
மேலும் நீர் தேங்கிநிற்கும் இடங்களைக்கண்டால் அவ்விடத்தில் அந்நீரை ஓடச் செய்துவிடவேண்டும். மண் சரிவுத்; தாக்கம் ஏற்படுவதற்கு முன் நாம் சிந்தித்துச் செயற்படவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது. நாம் வீடு கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கும் இடம் , சுற்றாடல் , பல்வேறு பாதிப்புக்களிலிருந்தும் பாதுகாப்புப்பெறும் முறைகள், வசதிகள் பற்றி ஆரம்பத்தில் சிந்தித்து செயற்படுதல் அவசியம். 
 
    வேறு இடம்வசதிகள் இல்லாதவர்கள், தமக்கென்று சொந்தமான உள்ள இடங்களில் தமது தேவைகளை நிறைவேற்றவேண்டிய நிலமை  ஏற்படின் , ஆரம்பத்திலேயே மண் சரிவுகளிலிருந்தும் ஏனைய பாதிப்புக்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்காக  மரங்கள் நட்டல் , கட்டுகள் (மதில்கள்); எழுப்பிக் கொள்ளல். போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி  சரியாக திட்டமிட்டுச் செய்து கொள்வதற்காக வேண்டி  அதுசம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களையும்,  அனுபவம் வாய்ந்தவர்களையும்  அனுகி அவர்களின் அறிவுறைகளையும் பெற்று அதன் அடிப்படையில் தேவையான பாதுகாப்பான வழிமுறைகளைச் (வேலைகளைச்) செய்துகொள்வது மிகமிக  அவசியமாகும்.
 
(03) - இடிமின்னல் பாதிப்பு
 
 காற்று மழையுடன் சேர்ந்து இடிமின்னலும் எதிர்பாராவிதமாக திடீரென ஏற்படுவதை நாம் காண்கின்றோம். இதன் பாதிப்பினாலும் அண்மையில் பல உயிர்ச் சேதங்களும் , பாதிப்புக்களும் ஏற்பட்டதைக் கேள்விப்பட்டோம் , கேள்விப்படுகின்றோம், கண்கூடாகவும் காணக்கூடியதாகவும் இருந்தது. தற்பொழுதும் ,பொதுவாக மழைபெய்யும் காலங்களில் அந்நிலைத் தொடர்வதை நாம் அறிவோம்.
 
  எனவே இடிமின்னல் ஏற்படும்போது இரும்புப் பொருட்களைப் பிடித்துக்கொண்டு தொழில் புரிவோர் , (வேலைகள் செய்வோர்) அச்சந்தர்ப்பத்தில் அவ்வாறான  வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்துகொள்ளல் வேண்டும். நீர் நிலைகளான குளம், குட்டைகள் , ஆறுகள் கிணறுகள்; அருகே நிற்பதையும் நீராடுவதையும்; (அச்சந்தர்ப்பத்தில்) தவிர்ந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 
 
மேலும் (இடிமின்னல் ஏற்படும் போது) வானொலி கேட்டல் தொலைக்காட்சி பார்த்தல்  மின்சார உபகரணங்கள் பாவித்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளல் வேண்டும். முடியுமான அளவில் வீட்டினுள்ளே தங்கி நிற்பதும்  வெளியில் நடமாடுவதைத் தவிர்ந்துகொள்வதும் நன்மையைப் பயக்கும்.
 
   எனவே இங்குகூறப்பட்ட அறிவுரையின் அடிப்படையில் நன்றாக சிந்தித்து எவ்விடயத்திலும் எச்சரிக்கையாகவும்  கவணமாகவும் நடந்துகொள்வதுடன்  பல்வேறு பாதிப்புக்கள் சிரமங்கள் உயிர் ஆபத்துக்களிலிருந்தும்; பாதுகாப்புடன் சிறந்த சுகதேகிகளாக வாழ்ந்து  ாட்டிற்;கு சிறந்த பிரசையாகவும் குடும்பத்தினர்களுக்கும் மற்றவர்களுக்கும்;; எல்லாச்சந்தர்ப்பங்களிலும் பிரயோசனமுள்ள மனிதனாகவும் வாழ முயற்சிக்க வேண்டும்.
»»  read more

3/05/2013

கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி  குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு  நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.  வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர்  விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை  இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு  சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும்  இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,,  பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச்  சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.
»»  read more

2/28/2013

இதயத்தை பாதுகாக்க உதவும் சில உணவு வகைகள்


உடலில் உள்ள பாகங்களில் மிகவும் முக்கியமானது இதயம் தான். இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது. எனவே நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு இதயத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. மேலும் இதயம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகள் தான். இவை அனைத்தும் சரியாகவும், ஆரோக்கியமானதாகவும் இல்லாததால், உடலில் இதயத்தை பாதிக்கும் பிரச்சனைகளான இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்றவை ஏற்பட்டு, இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமற்ற பழக்கங்கள், உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் தேவை. சரி, இப்போது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.
கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸில் ஃபோலேட், ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. இவை உடலில் உள்ள கொல்ஸ்ட்ரால் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். எனவே இதனை தண்ணீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால், மிகவும் நல்லது, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.


ரெட் வைன்
ஆல்கஹால் பருக வேண்டும் என்று நினைத்தால், சிறிது ரெட் வைன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ரெட் வைனில் ரெஸ்வெராட்ரால் மற்றும் கேட்டச்சின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தமனிகளின் சுவற்றை பாதுகாப்பதில் சிறந்தது. மேலும் இது HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். மேலும், இதய நோய் உள்ளவர்கள், இதனை குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது மிகவும் அவசியமானது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் அருந்தினால், பின் இதுவே நம் உயிருக்கு எமனாகிவிடும்.
மீன்கள்
மீன்களில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பொருளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடுவது நல்லது. அதிலும் சால்மன் மற்றும் தூனா போன்றவை இதயத்திற்கு மிகவும் சிறந்தது.


ஆலிவ் ஆயில்
ஆலிவ் பழங்களால் தயாரிக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் இரத்தக் குழாய்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதனை உணவில் அதிகம் சேர்த்தால், கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.


வால்நட்
நட்ஸில் ஒன்றான வால்நட்டில் ஒமேகா-3, மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இதனை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, தமனிகளில் இருக்கும் வீக்கம் அல்லது காயங்களை குறைத்து, இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டம் செய்ய உதவும்.


 பாதாம்
பாதாமின் நன்மைகளை சொன்னால் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட LDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்தும்.

டோஃபு
சோயா பொருட்களில் ஒன்றான டோஃபுவில் கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் பாலி-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுப்பதற்கு உதவும்.


இனிப்பு உருளைக்கிழங்கு
சாதாரண உருளைக்கிழங்கை விட, இனிப்பு உருளைக்கிழங்கு இதயத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் லைகோபைன் போன்றவையும் நிறைந்துள்ளது.
ஆரஞ்சு
இந்த புளிப்பு சுவை நிறைந்த சிட்ரஸ் பழத்தில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் இருப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஒரு சாதாரண ஆரஞ்சு பழத்தில் 62 கலோரிகளும், 3 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது. ஆகவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
கேரட்
கரோட்டின் அதிகம் நிறைந்துள்ள கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் மிகவும் சிறந்தது. மேலும் இதுவும் கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. எனவே தினமும் கேரட் சாப்பிட்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்
ஓட்ஸ் ஒரு சிறந்த சிற்றுண்டி. இந்த ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுப்பதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் சிறந்தது.


காஃபி
காபி மற்றும் டீயை குடித்தால், இருதய நோய் வருவதை தடுக்கலாம். ஒரு ஆய்வில் தினமும் 3-4 கப் காபி குடிப்பவர்களுக்கு 25% இதய நோய் வருவது தடுக்கப்படும் என்று சொல்கிறது. ஆனால், ஏற்கனவே நீரிழிவு மற்றும் ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள், காப்ஃபைன் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கொழுப்புள்ள பாலில் காபி மற்றும் டீ போட்டு குடிப்பதை விட, ப்ளாக் காபி அல்லது டீ குடித்தால் நல்லது. இதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படும்.
செர்ரி
செர்ரிப் பழங்களில் ஆந்தோசையனின்கள் இருப்பதால், இரத்தக் குழாய்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மேலும், இதில் இதயத்தை பாதுகாக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே தினமும் செர்ரிப் பழம் சாப்பிட்டு வருவது நல்லது.


ப்ளூபெர்ரி
இதயத்தைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிடும் போது, அதில் நிச்சயம் ப்ளூபெர்ரி இருக்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள ஆந்தோசையனின்கள் இந்த பழத்திற்கு அடர்ந்த நீல நிறத்தை தருவதோடு, இதயத்தையும் பாதுகாக்க உறுதுணையாக உள்ளது. மேலும் இந்த பழத்தில் எலாஜிக் ஆசிட் (ellagic acid), பீட்டா கரோட்டின், லூடின், வைட்டமின் சி, ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
»»  read more

2/03/2013

கிருமிநாசினிகளின் தவறான பயன்பாடே சிறுநீரக நோய்க்கு காரணம்

TN:கிருமிநாசினிகளை கையாளும் முறையில் விவசாயிகளுக்குப் போதிய தெளிவில்லாததாலேயே நாட்டில் சிறுநீரக நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி இப் பாதிப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க விசேட திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிணங்க கிருமிநாசினி விற்பனை, உபயோகம், கொள்வனவு செய்தல் போன்றவற்றிற்கு முறையானதிட்டம் வகுக்கப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தவும் வர்த்தமானியில் அதனை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற விவசாயிகளின் நிகழ்வொன்றில் இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாட்டின் சில மாவட்டங்களில் நீரிழிவு நோய் பெரிதும் அதிகரித்துள்ளது. இதற்கு விவசாயிகளின் கவனயீனமே காரணம்.

கிருமிநாசினியை உபயோகித்துவிட்டு அந்தப் போத்தலை வயலில் ஒரு மூலையில் எறியும்போது அது நண்ணீரோடு கலத்தல், உபயோகத்தின் பின் கையை கழுவாமல் உணவு உட்கொள்ளல், புகைபிடித்தல் மக்கள் குளிக்கும் இடத்தில் கிருமிநாசினி கேன்கள் போத்தல்களை கழுவுதல் போன்ற அறியாமையான நடவடிக்கைகளே இப்பாதிப்புக்குக் காரணமாகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாய அமைப்புகளுக்கு இது விடயத்தில் சிறந்த தெளிவு ஏற்படுத்தவும் புதியசட்ட திட்டங்களை இது தொடர்பில் நடைமுறைப்படுத்தவும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
»»  read more

1/25/2013

தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை


மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் தோன்றி இருப்பதால் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறித்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் கழிவுநீர் கலந்து நீர் அசுத்தமடைந்துள்ளதால் நுளம்புகள் அதிகம் பெருகும் அபாயமும் காணப்படுகின்றது.

இதனால் ஆட்கொல்லி டெங்கு நோய் போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதால் மக்கள் பெரிதும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் இந்த தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
»»  read more

1/14/2013

டெங்கு காய்ச்சலும்:தடுக்கும் வழிமுறைகளும்


VDI : டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். 
ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் கொள்கின்றனர்.. இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சில முக்கிய தகவல்களை அறிந்துகொள்வது அவசியமாகும்
டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்' வகை நுளம்புகள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.
டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.
ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.
»»  read more

1/04/2013

எலிக் காய்ச்சல் அபாய எச்சரிக்கை


நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 'லெப்டொஸ் பைரோஸிஸ்' எனும் எலிக்காய்ச்சல் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் மருத்துவ ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளுமாறும் தொற்றுநோய் வைத்திய பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி போன்ற மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ள மேற்படி தொற்றுநோய் வைத்திய பிரிவு, ஆரம்பத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறும் பட்சத்தில் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. 



எலிகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட சில விலங்குகளின் சிறுநீரிலிருந்து வெளியாகும் கிருமிகள் நீருடன் கலந்துவிடுவதால் பொதுமக்களுக்கு இந்த நோய் பரவுகின்றது எனவும் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களினூடாக மேற்படி கிருமிகள் மனித உடலுக்குள் இலகுவாக உட்புகுவதாகம் கண்டறியப்பட்டுள்ளதாக தொற்றுநோய் வைத்திய பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா