எதிர்பாராமல் மனிதனுடைய
வாழ்வில் ஏற்படக்கூடிய பல சம்பவங்கள் முன்னைய வரலாறுகளில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கு
மாகாணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது தான் அனர்த்த
முகாமைத்துவத்தின் உண்மைத்தன்மை மக்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தியது என்றால் அவை மிகையாகாது.
இந்த வகையில் பாடசாலை
மாணவர்கள் மத்தியிலும் அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிறுவனங்கள் பல்வேறு
பிரயத்தனங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
கடந்த 2012ஆம்
ஆண்டு மாகாண மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையில் அனர்த்த முகாமைத்துவ வினா விடை போட்டி
பிரிவு 8-9ல் கமு/சது/ முஸ்லிம் மகளிர் வித், மாணவர் MMF. றஸான் இரண்டாம் நிலையைப் பெற்று இந்த வலயத்திற்கும் பாடசாலைக்கு
பெருமை தேடித்தந்துள்ளார். இந் நிகழ்வு 22.02.2013ஆந் திகதி காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு
இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவி வெற்றிக் கின்னத்தையும், சான்றிதலையும்
இந் நிறுவனத்தின் அதிகாரியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காட்சியாகும்.
இந்தப்போட்டியில்
இந்த மாணவி வெற்றிபெற இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம்.தௌபீக் அவர்களும் அசிரியைகளான
MI.முஜிபா, MY. ஜெமிலா ஆகியோர் வழிகாட்டியாகவும், ஆலோசகர்களாவும் செயற்பட்டார்கள் என்பதை
சொல்லிக்கொள்வது இங்கு பொருத்தமாகும்.
2012 ஆம்
ஆண்டு மாகாண மட்டத்தில் GIZ நிறுவனத்தினால்
நடத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ வினாடி
வினா 8-9 பிரிவுப்
போட்டியில் இரண்டாம் நிலையை Miss. MMF
. றஸான் என்னும் கமு/சது/
முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி
தட்டிக்கொண்டதற்காக
22.02.2013 ஆந் திகதயின்று மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அந்
நிறுவனத்தின் அதிகாரிகளால் வெற்றிக்கின்னம், சான்றிதழ் வழங்கும் போது பிடிக்கப்பட்ட படம்
இதுவாகும்







0 comments:
Post a Comment