(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ரமேஷின் வழிகாட்டலின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகமும், சவளக்கடை பொலிஸாரும் இணைந்து அன்னமலை பிரதேசத்தில் இன்று (23.02.2013) மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாக சுற்றுப் பறச் சூழல்கள் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் போது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான சுற்றுப்புறச் சூழலை வைத்திருந்தவர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இச்சுற்றிவளைப்பில் சவளக்கடை பொலிஸ் நிலையப சுற்றுப்புறச்சூழல் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.சாஹிர், பொது சுகாதார பரிசோதகர் பி.இளங்கோவன், பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் உட்பட சக்தி இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கெண்டனர்.
இதன்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்னமலை சக்தி இளைஞர் கழகத்தினால் டெங்கு விளிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
![]() |









0 comments:
Post a Comment