இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/24/2013

2014ம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் குருனாகல், புத்தளம், கேகாலை மாவட்டத்தில்

(ஹனீபா)
2014ம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் 8 வது தேசிய கண்காட்சி குருனாகல், புத்தளம், கேகாலை மாவட்டத்தின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23) 07வது தெயட்ட கிருள கண்காட்சியை திறந்து வைத்த உரையாற்றும்போது பிரகடனம் செய்த வைத்தார்.

தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியின் தலைவரும் தொலைத்தொடர்புகள் தகவல் தொழில் நுட்ப அமைச்சருமான ரஞ்சித் சியம்பலபிட்டிய தலைமையில் நடைபெற்ற வைபவத்திலே இவ்வாறு பிரகடனத்தை செய்து வைத்தார்.

ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் இந்த மாகாணத்திலே உள்ள மக்கள் கடந்த 30 வருடகாலம் பட்ட கஷட்ம், நஷ;டம் அத்தனையும் எனக்க நன்றாக தெரியும் ஆனால் இன்று அந்த நிலை இல்லை மக்கள் இன்று நிம்மதியாக அச்சமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

அச்சமின்றி நிம்மதியாக சமாதானம் சகவாழ்வுடன் சமவுரிமையுடன் வாழும் போது அடுத்தகட்டமாக நடைபெறுவது எமது பிரதேசத்தின் அபிவிருத்தியாகும் அது தற்போது எந்தவித போதங்களுமின்றி அதாவது இன,மத மொழி கலாசார வேறுபாடுகளின்றி நடைபெற்று வருகின்றது.
கிழக்கின் நவோதயம் மூலம் உங்கள் எதிர்காலம் வழமாக அமையும் உங்கள் பிரதேசங்கள் ஒளிமயமானதாக அமையும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் வழமானதாக அமையும் இதனை எமது இளைய தலைமுறையினர் அனுபவிக்க வேண்டம்  அதனை நிச்சயமாக அனுபவிப்பார்கள்.

இலங்கையின் வரலாற்றில் அம்பாறை மாவட்டம் மிகவும் பழமை வாய்ந்தது பலவரலாறுகளைக் கொண்டது.

இந்தப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு தெயட்ட கிருள மூலம் சிறந்த எதிர்காலம் அமையப் பெற்றுள்ளது இதன் மூலம் எதிகாலத்திலும் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாம் நல்லது செய்கின்ற போதும் அதனை விமர்சிக்கின்ற ஒரு கூட்டம் இருந்த கொண்டு அந்நிய சக்திகளிடம் காட்டிக் கொடுப்புக்களை செய்து வருகின்றனர் நாம் நல்லது செய்கின்ற பொது நாம் எதற்கும் அஞ்ச தேவையில்லை பயப்பட தேவையில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள்,மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள்,வெளிநாட்டு இராஜ தந்திரிகள், திணைக்கள தலைவர்கள். மாநகர.நகர,பிரதேச சபைகளின் தலைவர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா