புகைத்தலால் வருடாந்தம் 21,000 பேர் பலி
இலங்கையில் புகை பிடித்தல் காரணமாக வருடாந்தம் 21000 பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரவித்துள்ளது.
புகைத்தலால் ஏற்படுகின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட
நேரிடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம்
ஏற்படுகின்ற கரு கலைவுகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட
முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
புகைப் பிடித்தலை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment