இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/09/2013

காதலியை வெட்டிக் கொன்று உடலை நாய்களுக்கு போட்ட வீரர்

பிரேசிலில் வளர்ந்து  வரும் கால்பந்து வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசோசா  தனது கள்ளக் காதலியை கடத்திக் கொலை செய்து அவரது உடலை வெட்டித் துண்டுகளாக்கி சிலவற்றை நாய்களுக்கு உணவாகப் போட்ட பயங்கரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பிரேசிலின் பிளமிங்கோ கால்பந்து  அணியில் கோல் காப்பாளராக இருப்பவர் ப்ரூனோ. இவரது கள்ளக் காதலி எலீசா சமுடியோ . இருவருக்கும் இடையேயான உறவில் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை விடயத்தில் ப்ரூனோ, தொடக்கம் முதலே விரும்பவில்லை.

ப்ரூனோவின் எதிர்ப்பையும் மீறி எலீசா குழந்தை பெற்றெடுத்தது ப்ரூனோவுக்கு எரிச்சலாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தனது நண்பனும் பொலிஸ் அதிகாரியுமான சாண்டோஸ் என்பவரை அணுகி எலீசாவை கொலை செய்யுமாறு கூறியிருக்கிறார்.
இதையடுத்து, ரியோடி ஜெனிரோ நகரிலிருந்து எலீசாவைக் கடத்திய லூயிஸ், பெலோ ஹாரிசான்டே என்ற நகருக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்.

அதன் பின்னர் ப்ரூனோ முன்னிலையில் எலீசா கொல்லப்பட்டிருக்கிறார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். எலீசாவின் உடல் பாகங்களை தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குப் போட்டு விட்டு மிகுதி பாகங்களை வீட்டிலேயே கொங்கீரீட் வைத்து பூசி புதைத்துவிட்டார் ப்ரூனோ.

இந்தக் கொடூரக்  கொலை தொடர்பாக ப்ரூனோ அவரது மனைவி உட்பட 8 பேர் மீது  குற்றஞ்சாட்டப்பட்டது. தொடக்கத்தில் தன் மீதான இந்தக் குற்றஞ்சாட்டுக்களை நிராகரித்தே வந்தார் ப்ரூனோ.  இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்ற விசாரணையின் போது அவர் எலீசாவை கொலை செய்து உடல் துண்டுகளை நாய்க்குப் போட்டதை ஒப்புக் கொண்டார் ப்ரூனோ.

குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து   அவருக்கு 40 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ப்ரூனோவின் கனவு தகர்ந்து போனது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா