(ஹனீபா)
குடும்பத்தை பாதுகாக்கின்ற பெண்களை நாம் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில்' ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர்தினவிழா (13.03.2013) மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிபாயா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச.;பியசேன அவர்களின் செயலாளர் ரீ.ஜெயாகர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபைராஜா உட்பட கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் மனிதன் உளரீதியாக அபிவிருத்தி அடையாமையே பெண்கள் இன்னும் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றமைக்கு காரணமாக அமைகின்றது எனத் தெரிவித்தார்.









0 comments:
Post a Comment