இன்று நாடளாவிய ரீதியில் மழையும் வெள்ளமும் மண்சரிவுகளும் இடிமின்னலும்
ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அது மாத்திரமல்ல அதனால் மக்கள் பல்வேறு
பிரச்சினைகளுக்கும் துன்பங்களுக்கும் சொல்லொனா துயரங்களுக்கும் உயிர்
ஆபத்துக்களுக்கும் முகம் கொடுப்பதுடன் மாத்திரமல்ல சில பகுதிகளில் மக்கள்
அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலமைகள் உருவாகுவதற்கு
முன்பே நாம் இதுபற்றி சிந்தித்து சில முக்கியமான விடயங்களுக்கு
மாத்திரமாவது சிறந்த தீர்வுகளைத்தெரிவு செய்திருக்க வேண்டும். (மாற்று
வழிகளைத்) தெரிந்து செயற்பட்டிருக்க ருக்கவும் வேண்டும்.
இப்பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் ?
என்று அறியாமல் தடுமாறும் மக்கள் அதிகம். அவ்வாறானவர்களுக்கு சிறந்த
அறிவுரைகளை வழங்குவது எம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். இதன்
அடிப்படையில்தான்; இக்கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
பெய்யும் மழை நீர் சுத்தம் என்றாலும் அது பூமியை அல்லது நிலத்தை
வந்தடைந்ததும் அந்நீர் அசுத்தம் அடைந்துவிடுகிறது. சிலர் இந்நீர்
சுத்தமானது எனகருதி பல்வேறு முறையில் பாவித்து வருவதுடன் அதனால் பல்வேறு
நோய்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே இதுபற்றி நாம்
ஒவ்வொருவரும் சில விளக்கங்களை அறிந்திருப்பது மிகவும் முக்கியமான
விடயமாகும். அறவே நீரில்லாத மிகவும் நீர்த்தட்டுப்பாடான பகுதிகளில் நன்றாக
நீரைகொதிக்க வைத்து பாவிக்கலாம். முடியுமான அளவில் பருகுவதற்கு சுத்தமான
சிறந்த நீரையே பாவிக்க முயற்சிக்க வேண்டும். “குளோரின்”; எனும்
இரசாயணப்பொருளைப் பாவித்தாலும் இதனால் 65% வீதமளவில் தான் கிருமிகள்
அழிக்கப் படுகின்றது. எனவே கொதித்தாறிpய நீரே 100% சுத்தமானது என்பதை
மக்கள் அறிந்து மனதில் பதித்து கொள்ளல் வேண்டும். இவ்வாறான சூழலில்
எம்மத்தியில் ஏற்படும் முக்கியமான சில பிரச்சினைகள் என்ன? அதற்கான
தீர்வுகள் என்ன? என்பவற்றைப் பற்றி சற்று சிந்தித்துப்பார்ப்பது மிகவும்
பொருத்தமாக இருக்கும். விஷேடமாக இ
(01) – வெள்ளம் ஏற்படும்போது பரவலாக ஏற்படும் (பரவும் )நோய்கள்.
(02) - மண் சரிவுத் தாக்கம்.
(03) - இடிமின்னல் பாதிப்பு.
1- வெள்ளம் ஏற்படும்போது பரவலாக ஏற்படும்
(பரவும்) நோய்கள்.
(01) வெள்ள நீரைப் பருகுவதனால் ஏற்படும் நோய்கள்:-
வயிற்றோட்டம் - இரத்தம் கலந்த வயிற்றோட்டம்.
அமீபாக்களால் ஏற்படும் வயிற்று நோய்.
மூளைக்காய்ச்சல்.
வாந்திபேதி.
செங்கமாரி.
இளம்பிள்ளைவாதம்
தைபொயிட்டுக்காய்ச்சல். போன்றவைகளை விஷேடமாகக் குறிப்பிடலாம்.
இந்நோய்களிலிருந்து பாதுகாப்புப்பெற
நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் :-
எப்பொழுதும் கொதித்து ஆறிய நீரையே பருக வேண்டும்.
எப்பொழுதும்
உணவு சமைப்பதற்கு உண்பதற்கு முன்பும் மலசல கூடம் சென்று வந்த பின்பும்
சவர்க்காரமிட்டு இருகைகளையும் கழுவிக்கொள்ள வேண்டும்.
எல்லாச்சந்தர்ப்பங்களிளும் வீட்டலேயே சமைத்த உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.
எல்லாச்சந்தர்ப்பங்களிளும் சமைத்த உணவுகளை உடனேயே உண்ண வேண்டும். ஈக்கள் மொய்க்காது உணவை மூடி பாதுகாத்து வைக்க வேண்டும்.
எப்பொழுதும் மலம் கழிப்பதற்காக மலசலகூடமொன்றைப் பாவிக்கவேண்டும். சிறுபிள்ளைகளின் மலத்தை மலசலகூடத்தில் போடப்படவேண்டும்.
பழங்களை சுத்தமான நீரில் நன்றாகக் கழுவியும் கீரை வகைகளை நன்றாகக் கழுவிச் சமைத்தும் உண்ணவேண்டும்.
பாடசாலைகளுக்குச்செல்லும் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கொதித்தாறிய நீரை சுத்தமான புட்டியொன்றில் கொடுத்தனுப்ப வேண்டும்.
பாடசாலைகளுக்குச்
செல்லும் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே
கொண்டு செல்வதற்கு உற்சாகமளிக்கப்பட வேண்டும்.
வீதியோரங்களில்
விற்கப்படும் உணவுகளையும் ஐஸ்பெக்கட் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளையும்
வாங்கி உண்ண வேண்டாம். என பிள்ளைகளுக்கு அறிவுறை கூறவும். (இந்நடவடிக்கைகள்
மாரி காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் கடைபிடித்தல் மிகவும்
சிறந்த பழக்கமாகும் என அறிவுரை வழங்குங்கள்.)
மேலும் கடைகளில் திறந்து விற்கப்படும் உணவுப்பொருட்கள் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஈக்கள் உண்டாகாமல் இருப்பதற்கு (பெருகாமல் இருப்பதற்கு) குப்பைகளை உரிய முறையில் அகற்றிவிட வேண்டும்.
(02) அசுத்தமான நீரினால்
உணவுகளைத் தயாரிப்பதனாலும் ஆடைகளைக் கழுவுவதனாலும்
ஏற்படும் நோய்கள் :-
கண்நோய்.
சொறி. (ஸ்கேபீஸ்).
மேலும் சில தொற்று நோய்கள். போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு:-
உடைகளை சுத்தமான நீரில் கழுவி வெயிலில் காய வைத்து இ அல்லது அயன் செய்து அணிய வேண்டும்.
நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற மேற்குறிப்பிட்ட சுகாதார பழக்க வழக்கங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
(03) நீரில் செறிந்துள்ள
ஒட்டுண்ணிகளினால் ஏற்படும் நோய்கள்.
-நுளம்பினால் பரவும் நோய்கள்.
-யானைக்கால் நோய்.
- மலேரியா.
-டெங்கு. போன்றவைகளை விஷேடமாகக்; குறிப்பிடலாம்.
இந்நோய்களிலிருந்து பாதுகாப்பப் பெறுவதற்கு:-
• சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காமல் நீரை ஓடச்செய்து விட வேண்டும்.
டெங்கு போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளச்செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
மேலும் இந்நோய் தடுப்புச் சம்பந்தப்பட்ட (தடை நடவடிக்கைகளை) மேற்கொள்ளும்
உத்தியோகத்தர்களை அனுகி மேலதிகமாக அவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
(04) சுகாதாரக் குறைவினால் ஏற்படும்
புழு நோய்கள் :-
• கொக்கிப்புழு அல்லது கொழுக்கிப்புழு நோய்.
• வட்டப்புழு. நோய்
• தட்டைப்புழு நோய்.
• சொறிப்புழு. நோய்
• நுண்ணிய வெண்புழு நோய் . போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இந்நோயிலிருந்து பாதுகாப்பப்பெறுவதற்கு:-
- வெளியில் செல்லும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாதணிகள் அணிந்து கொள்ள வேண்டும்.
-புழு நோய்க்கான மருந்துவகைகளை வைத்தியரின் ஆலோசனைப்படி பாவித்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் “தன் சுத்தம்” நடவடிக்கைகளை அவசியமாகப்
பேணிக்கொள்ளல் வேண்டும்.
(02) – மண் சரிவுத் தாக்கம்
மழை பெய்யும் காலங்களில் எதிர்பாரா விதமாக திடீரென நாம் வாழும்
வீட்டுச் சூழலில் மண்சரிவு ஏற்படலாம். அவ்வாறு ஏற்படக்கூடிய அறிகுறிகள்
தென்பட்டால் உடனடியாக அவ்விடத்திலிருந்து அத்தியவசியமான பொருட்களை (மருந்து
வகைகள் ணம்,
அத்தியவசியமான கடிதங்கள், கையில் எடுத்துச்செல்ல முடியுமான மிகவும்
அவசியமான பொருட்களை மாத்திரம் ) எடுத்துக்கொண்டு தாமதியாமல் பாதுகாப்பான
இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடவேண்டும்.
மேலும் நீர் தேங்கிநிற்கும் இடங்களைக்கண்டால் அவ்விடத்தில் அந்நீரை ஓடச்
செய்துவிடவேண்டும். மண் சரிவுத்; தாக்கம் ஏற்படுவதற்கு முன் நாம்
சிந்தித்துச் செயற்படவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது. நாம் வீடு
கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கும் இடம் , சுற்றாடல் , பல்வேறு
பாதிப்புக்களிலிருந்தும் பாதுகாப்புப்பெறும் முறைகள், வசதிகள் பற்றி
ஆரம்பத்தில் சிந்தித்து செயற்படுதல் அவசியம்.
வேறு இடம்வசதிகள் இல்லாதவர்கள், தமக்கென்று சொந்தமான உள்ள இடங்களில்
தமது தேவைகளை நிறைவேற்றவேண்டிய நிலமை ஏற்படின் , ஆரம்பத்திலேயே மண்
சரிவுகளிலிருந்தும் ஏனைய பாதிப்புக்களிலிருந்தும் பாதுகாப்புப்
பெற்றுக்கொள்வதற்காக மரங்கள் நட்டல் , கட்டுகள் (மதில்கள்); எழுப்பிக்
கொள்ளல். போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி சரியாக திட்டமிட்டுச் செய்து
கொள்வதற்காக வேண்டி அதுசம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களையும், அனுபவம்
வாய்ந்தவர்களையும் அனுகி அவர்களின் அறிவுறைகளையும் பெற்று அதன்
அடிப்படையில் தேவையான பாதுகாப்பான வழிமுறைகளைச் (வேலைகளைச்) செய்துகொள்வது
மிகமிக அவசியமாகும்.
(03) - இடிமின்னல் பாதிப்பு
காற்று மழையுடன் சேர்ந்து இடிமின்னலும் எதிர்பாராவிதமாக திடீரென
ஏற்படுவதை நாம் காண்கின்றோம். இதன் பாதிப்பினாலும் அண்மையில் பல உயிர்ச்
சேதங்களும் , பாதிப்புக்களும் ஏற்பட்டதைக் கேள்விப்பட்டோம் ,
கேள்விப்படுகின்றோம், கண்கூடாகவும் காணக்கூடியதாகவும் இருந்தது.
தற்பொழுதும் ,பொதுவாக மழைபெய்யும் காலங்களில் அந்நிலைத் தொடர்வதை நாம்
அறிவோம்.
எனவே இடிமின்னல் ஏற்படும்போது இரும்புப் பொருட்களைப் பிடித்துக்கொண்டு
தொழில் புரிவோர் , (வேலைகள் செய்வோர்) அச்சந்தர்ப்பத்தில் அவ்வாறான
வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்ந்துகொள்ளல் வேண்டும். நீர் நிலைகளான குளம்,
குட்டைகள் , ஆறுகள் கிணறுகள்; அருகே நிற்பதையும் நீராடுவதையும்;
(அச்சந்தர்ப்பத்தில்) தவிர்ந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
மேலும் (இடிமின்னல் ஏற்படும் போது) வானொலி கேட்டல் தொலைக்காட்சி பார்த்தல்
மின்சார உபகரணங்கள் பாவித்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளல்
வேண்டும். முடியுமான அளவில் வீட்டினுள்ளே தங்கி நிற்பதும் வெளியில்
நடமாடுவதைத் தவிர்ந்துகொள்வதும் நன்மையைப் பயக்கும்.
0 comments:
Post a Comment