இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2013

எகிப்தில் நடைபெற்ற கிரிகெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அல் அஸ்ஹர் அணி அபார வெற்றி

(ஹபீபுல்லாஹ் பாயிஸ்)
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஆசிய அணிகளுக்கிடையிலான கிரிகெட் சுற்றுப் போட்டி (2013-02-26) நடை பெற்றது. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டி பல சுற்றுக்களாக நடைபெற்று இறுதிப் போட்டிக்கு இலங்கையும் பாகிஸ்தானும் தெரிவாகின.

இலங்கை அணி நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்று ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மட்டுப்படுத்தப்பட்ட 12 ஓவர்களில் 3 விக்கட்களை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 1௦.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 169 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடர் ஆட்ட நாயகனாகவும் இலங்கையைச் சேர்ந்த இர்பான் ஷிஹாபுத்தீன் தெரிவு செய்யப்பட்டதோடு இன்னும் பல விருதுகளையும் இலங்கை அணியினர் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா