இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/14/2013

இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீன இளைஞன் பலி

மேற்குக் கரை அகதி முகாமுக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மோதலின் போது இஸ்ரேல் துருப்புகளின் துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பலஸ்தீன இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. அகதி முகாமுக்குள்ளிருந்து கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்த படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹெப்ருனின் தென்பகுதியில் அமைந்திருக்கும் அல் பவார் அகதி முகாமைச் சேர்ந்த மஹ்மூத் அல் டிடி என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். முன்னாள் ஊடகவியல் மாணவரான டிடி சிறைக் கைதிகளை விடுவிப்பதற் கான இளைஞர் அணியொன்றை அமைத்து செயற்பட்டு வந்தவர் என்றும் மூன்று ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் இருந்தவர் என்றும் ஹெப்ருனைச் சேர்ந்த செயற்பாட்டாளர் இஸ்ஸா அமர் தகவல் அளித்துள்ளார்.

இஸ்ரேலிய படை அகதி முகாமுக்குள் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்ததாக பலஸ்தீன தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா