(ஹனீபா)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (24.03.2013) காலை 11.00 மணிக்கு சம்மாந்துறைக்கு விஜயம் செய்து நவீன 'ஈ' கல்வி மையக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு முன்னெடுப்பு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன 'ஈ' கல்வி மையக்கட்டிடத்தினையே ஜனாதிபதி திறந்து வைத்தார்.
சுpறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும்,சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம் நௌஷhட் அவர்களின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இங்கு விஜயம் செய்தார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக தொலைத் தொடர்புகள் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீர திசானாயக்க, ஆளுணர் மொஹான் விஜேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர், சிறியாணி;, மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட திணைக்களத்தலைவர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment