கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ துருப்பினர் மேற்கொண்ட வான்
தாக்குதலொன்றில் குறைந்த பட்சம் 11 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குனார் மாகாணத்திலேயே இந்த பரிதாபகரமான சம்பவம் பதிவாகியுள்ளது. சிங்கால்
மாவட்டத்தில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது இந்த
உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலானது ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நேட்டோவின் குறித்த தாக்குதலுக்கு ஆப்கான் அதிபர் ஹமீட் கர்சாய் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலை ஆப்கானிஸ்தானின் உளவுப்பிரிவும் உறுதி செய்தது.
இதில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 10 பேர் சிரேஷ்ட
தலைவர்களென்றும் உளவுப்பிரிவு தெரிவித்தது.
எவ்வாறாயினும் 11 குழந்தைகள் குறித்த தாக்குதலில் கொள்ளப்பட்டதனையும்
மேலும் 6 பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்ததையும் ஜனாதிபதி மாளிகையும்
குனார் ஆளுனரும் உறுதி செய்தனர்.
ஆப்கான் உள்துறை அமைச்சின் தகவல்களின் பிரகாரம் குறித்த தாக்குதலில் 6
தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் இருவர் சிரேஷ்ட தலைவர்கள் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வான் தாக்குதலை மேற்கொண்டதை உறுதிப்படுத்திய நேட்டோ
பேச்சாளர் கெப்டன் லுக் கேர்னியல் சில சிவிலியன்கள் காயமடைந்ததாகவும்
தெரிவித்தார். எனினும் குழந்தைகள் 11 பேர் கொல்லப்பட்டமை குறித்து அவர்
எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
Bas VV







0 comments:
Post a Comment