இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/08/2013

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞர் பலி

இலங்கை இளைஞர் ஒருவர் சவூதி அரேபியாவின் தமாம் நகரில் அமைந்துள்ள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாத்தாண்டியா, பண்டாரநாயக்க புரயைச் சேர்ந்த 25 வயதுடைய அழகக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் குமார என்ற இளைஞரே சுகவீனம் காரணமாக உயிரிழந்தவராவார். 

மூன்றரை வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதியின் ரியாத் நகருக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சவூதி அரேபிய குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாமில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா