இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/24/2013

பங்களாதேஷ் கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு


பங்களாதேஷில் 8 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 100 க்கும் அதிகமானோர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


சுமார் 35 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  150 பேர் வரை முதலுதவி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவம் மீட்புப் பணியை கையேற்றுள்ளதாகவும் துரிதமாக அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டாக்காவின் சாவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ரானா பிளாஸா என்ற கட்டிடமே இன்று அதிகாலை 8.30 மணியளவில் இடிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா