இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/24/2013

கூருகல பள்ளியில் கைவைத்தால் அரசாங்கம் கவிழும் : அசாத் சாலி


கூருகல பள்ளியில் இந்த அரசாங்கம் கைவைக்குமானால் இன்னும் 40 நாட்களுக்குள் சின்னாபின்னமாகுமென முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இல்லை. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே போகின்றன.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுக்காக கூருகல பள்ளிவாசல் இருக்கும் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்விடத்தில் அரசாங்கம் கைவைக்குமானால் 40 நாட்களுக்குள் சின்னாபின்னமாகும்.

வடமாகாண சபைத் தேர்தலை வைப்பதற்குரிய திகதிதியை சோதிடர் சொல்ல வேண்டுமென கூறப்படுகின்றது. அதற்கு 9, 18, 26 ஆகிய திகதிகள் பொருத்தமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
Bas VI

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா