இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/12/2013

சுய தொழில் பயிற்ச்சி தொடர்பான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
ஏதிர்காலத்தில் சுய தொழில் துறை மூலம் தமது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதாயினும் சமகாலத்தில் சந்தைக்கு ஏற்ப நல்ல தரமான உற்பத்திகளை மேற் கொள்ளக் கூடிய வகையில் தொழில் பயிற்சிகளைப் பெற்றிருப்பது அவசியமாகும் என சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எ.மன்சூர் தெரிவித்தார்.

மனிதவலு வேலைவாய்ப்பு தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் சம்மாந்தறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான மலையடிக்கிராமம் மற்றும் சென்னல் கிராமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்காக தேசத்ததுக்க மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தொழில் நுட்பப் பயிற்சியான சீமெந்து உள்ளிட்ட உற்பத்திகள் தொடர்பான பயிற்சிகளை முடித்துக் கொண்ட குடும்பத் தலைவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (07) ஞாயிற்றுக் கிழமை  மலையடிக் கிராமத்திலுள்ள  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட உரையாற்றும் போதே  பிரதேச செயலாளர் மன்சூர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்றைய தொழில் சந்தையின் போட்டிக்கு ஏற்ப  தரமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலமே நல்ல சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

மக்களின் தேவையறிந்து  அவர்களின் ரசனைக்கு ஏற்ப பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் இன்று நாம் பார்க்கின்ற போது ஒரே  தொழிற் துறைகளில் சிலருக்க நல்ல கேள்வியுள்ளது உற்பத்தி குறைவாக காணப்படுகின்றது அதே சமயம் சிலருக்கு அதே தொழிலில்  கூடுதலான உற்பத்தி கானப்படுகின்றது கேள்வி குறைவாக காணப்படகின்றது  இது தத்தமது தொழிலில் அவர்கள் கொண்டுள்ள தொழில் திறமையாகும் தொழில் நுட்பத்தினுடனான தொழிற் தேற்சியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர் காலத்தில் சிகை அலங்கார தொழிலை மேற் கொள்ள வேண்டுமாயினும் அதை நாம் நினைத்தவாறு செய்ய முடியாது அத்தொழிலில்  பயிற்சியினை பூர்த்தி செய்து அந்த அறிவை பூரணமாக பெற்றபின்னரே அதனை மேற்கொள்ள முடியும் அவ்வாறு சந்தையில் தொழில் போட்டி நிலவுகின்றது அதற்கு ஏற்ப தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இன்று தங்களுக்கு வழங்கப் படுகின்ற தொழிற் பயிற்சிக்கான சான்றிதழ் மிகவும் பெறுமதி மிக்கதாகும் அது தங்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கான அத்தாட்சியாகும் அதனைக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வளம் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் மன்சூர் தெரிவித்தார்.


மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில்  அதிதிகளாக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.றிபாத்,சமுர்த்தி உதவி முகாமையாளர் முஹம்மட் ஹனீபா, கிராம உத்தியோகத்தர் ஐ.உபைதுல்லா உட்பட பலர் கலந்த கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா