இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/21/2013

அட்டாளைச்சேனை பிரதேச பிரதேச விளையாட்டு விழா Photos


(ஹனீபா)

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்ற இளைஞர்கள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் விளையாட்டின் மூலம் மூவின மக்களிடைய சாந்தி சமாதாணம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா நேற்று (20) அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் விளையாட்டினுடாக உடல் உள ஆரோக்கியம்பெறுவது மாத்திரமன்றி நல்ல மனபக்குவம் விட்டுக் கொடுப்பு சகிப்புத் தன்மை என்பன ஏற்படுத்துவதுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனவலிமை ஏற்படுத்தப்படுகின்றன எனவும் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தேசிய ரீதியில 200 மீற்றர் ஓட்டப் போட்டியில்; வெற்றியீட்டிய ஏ.எம். றஜாஸ்கான், என்பவரை பயிற்றுவித்த விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜூடீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் என்பன வழங்கி அமைச்சரினால் கௌரவிக்கப்பட்டார்.

இவ்விளையாட்டு விழாவின்; போது 83 புள்ளிகளை பெற்று சோபர் விளையாட்டுக் கழகம் ஓவரோல் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. 

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. அன்சில் உட்பட மக்கள் பிரதி நிதிகளும் அரச உயர் அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் கலந்த கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா