இந்த வருடத்தின் முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம் இன்று தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இன்று சந்திர கிரகண குறை நிழல் தெரிய உள்ளதோடு நாளை கருநிழல் தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment