இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/25/2013

சவூதி வார இறுதி நாட்களை மாற்ற திட்டம்


சவூதியின் வார இறுதி நாட்களை மாற்றுவதற்கு அந்நாட்டு ஷ¤ரா கவுன்ஸில் இணங்கியுள்ளது. ஏனைய வளைகுடா நாடுகளைப் போன்று வியாழன், வெள்ளி தினங்களுக்கு பதில் வார இறுதி நாட்களை வெள்ளி, சனி தினங்களுக்கு மாற்றவே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக நடவடிக்கை மற்றும் வியாபார சந்தையை கருத்தில் கொண்டு வளைகுடா நாடுகள் வெள்ளிக்கிழமையுடன் சனிக்கிழமையை வார இறுதி நாட்களாக நடைமுறைப்படுத்தியபோதும் சவூதியில் வியாழன், வெள்ளி தினங்களே வார இறுதி நாட்களாக உள்ளன. இந்நிலையில் சவூதியின் பாராளுமன்றம் போல் செயற்படும் சூரா கவுன்ஸில் வார இறுதி நாட்கள் குறித்து ஆலோசிக்க இணங்கியுள்ளது.

இந்த தகவலை அந்நாட்டு சூரா கவுன்ஸிலின் பிரதான உதவியாளர் பஹ்ஹத் பின் முசுதத் அல் ஹமத் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் வார இறுதி நாட்களை மாற்றுவது யூத தினங்களுக்கு பொருந்திவிடும் என சவூதியின் முஸ்லிம் தலைவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சவூதி வர்த்தக சந்தை 5 தினங்கள் செயற்பட்டபோதும் அது சர்வதேச வர்த்தக சந்தையுடன் மூன்று தினங்களுக்கே ஒன்றிம் போகின்றது.

இது வங்கி மற்றும் நிதிச் செயற்பாடுகளுக்கும் பொருந்தும். ஓமானில் எதிர்வரும் மே மாதம் தொடக்கம் வார இறுதி நாட்கள் வியாழனிலிருந்து சனிக்கிழமைக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா