சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் இலத்திரனியல் மைய நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு அழ ஹிலால் வித்தியாலய அதிபர் ஏ.பி.முபீன் தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற 2013ம் ஆண்டிற்கான தேசத்திங்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி இலத்திரனியல் மைய நிலையம் தொழில்நுட்ப தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய நிலையமாக 4 மில்லியன் ரூபா செலவில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதம அதிதி தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வருகையினை நினைவு கூறும்வகையில் அமைச்சரினால் மரக் கன்றொன்றும் நட்டிவைக்கப்பட்டது. அத்தோடு வித்தியாலய அதிபரினால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஷேட அதிதியாக சிரேஸ்ட அமைச்சர் பி. தயாரத்ன, கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், சிறியானி ஜெயவிக்ரம, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கல்முனை கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹசீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாநகர சபை உறுப்பினரும் கல்முனைத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான ஏ.எம். றியாஸ், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment