இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/21/2013

வெலிகாமத்தில் இன்று நடை பெற்ற துயர் சம்பவம்


(ரசான்.D.I.sc)
இன்று பிற்பகல் 3.00 மணி அளவில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகம எனும் ஊரில் முஸ்லிம் சகோதரர் ஒருவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த பிரதேச மக்கள் தீயணைப்பு படை வருவதற்கு முன் சம்பவ இடத்துக்கு சென்று தீ பரவுவதை கட்டுப்படுத்தினர்.

ஏற்பட்ட விபத்தின் மூலம் வீட்டின் ஒரு பகுதி எறிந்ததோடு பக்கத்து வீட்டுக்கும் பரவியது விபத்துக்குரிய காரணம் உறுதியாக கண்டறியப்படாத நிலையில் மின்சாரக்கோளாறு என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெலிகம நகர பிதா அல்ஹாஜ் ஹுசைன் ஹாஜியார் முகம்மத் மற்றும் வெலிகம காவல்துறை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர் .கடந்த இரு தினங்களுக்குள் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து என்பதால் வெலிகம பகுதியில் ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா