(எம் ரீ எம்.பர்ஹான்)
முஸ்லிம்களைப் பற்றி யார் பேசினாலும் முந்திக் கொண்டு குறுக்கீட செய்யும், அஸ்வர் எம்.பிக்கு முஸ்லிம் என்றாலே பிடிக்காது என்றுதான் நினைக்கின்றேன்.
இவ்வாறு சம்மாந்துறைத் தொகுதியின் ஐ.தே.கவின் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி தனக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று ஞாயற்றுக் கிழமை ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள் அங்கோடைக்குப் போக வேண்டும் என்பதாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் எனக்கு எதிராக விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு ஆளுந் தரப்பில் எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் தயாராக இல்லை. இந்நிலையில் மாற்று இனத்துச் சகோதரர்கள் முஸ்லிம்களைப் பற்றி பேசுகின்ற போது ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் அப்துல் காதர் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசுகின்றவர்களை பேச விடாது குழப்பிக் கொண்டிருக்கையில் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசாது இருக்கின்றார்கள். இதன் காரணமாகவே இவர்கள் பொது பல சேனவில் இணைந்து கொள்ளப் போகின்றார்களோ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இது எனது சந்தேகம் மட்டுமன்றி நாட்டில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களினதும் சந்தேகமாகவே இருக்கின்றது.
இதனைத் தெரிவித்தற்காக என்னை அங்கோடைக்கு அனுப்ப வேண்டுமென்று அஸ்வர் எம்.பி கூறி இருப்பதனை வன்மையாக கண்டிக்கின்றேன். ஒரு அரசியல்வாதி அங்கோடைக்கு போக வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது பொது மக்களாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த போது, அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் அதிகமாக பேசி, அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்திய பெருமை அஸ்வர் எம்.பிக்குத்தான் இருக்கின்றது.
இஸ்லாத்தில் நபிகள் (ஸல்) நாயகமாக இருந்தாலும், அவரை இறைவனுக்கு ஒப்பாக கருத முடியாது. அப்படி கருதுவது பெரும்பாவமாகும். ஆனால், பாராளுமன்றத்தில் ஒரு மனிதரை கடவுளைப் போன்றவர் என்று வர்ணித்த பெருமையும் இவரையே சாரும்.
நாங்கள் முஸ்லிம்களுக்காக பேசுகின்றோம். அஸ்வர் எம்.பி தமது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார் என்பதனை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.
முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, இவர் அடிக்கடி குறுக்கீடு செய்ததாகவும், எரிச்சலடைந்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர் ஒருவர் சற்று பேசாது இருக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
முஸ்லிம்களைப் பற்றி யார் பேசினாலும் முந்திக் கொண்டு குறுக்கீட செய்யும், அஸ்வர் எம்.பிக்கு முஸ்லிம் என்றாலே பிடிக்காது என்றுதான் நினைக்கின்றேன். இப்படியாக செயற்படுன்றவர்தான் அங்கோடைக்குப் போக வேண்டுமென்று எந்த சுயபுத்தியுள்ள மனிதரும் கூறுவர்.
சம்மாந்துறை மண்ணின் மகிமையைப் பற்றி அஸ்வர் எம்.பி கூறி இருப்பதனையிட்டு நான் பெருமைப்படுன்றேன். சம்மாந்துறை மண் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் வாசைன கொண்டது. இந்த மண்ணில் அஸ்ரப்பும் பிறந்தார்.
ஐ.தே.கவின் மூலமாக எம்.பி என்ற முகவரியைப் பெற்றுக் கொண்ட அஸ்வர் எம்.பி அந்தக் கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, இன்று அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார். நாளை பதவிக்காக எந்தக் கட்சிக்கு மாறுவார் என்ற உத்தரவாதம் இல்லை. மேலும், அஸ்வர் எம்.பி இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த வரலாறு கிடையாது. முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கின்றவர்களை எதிர்த்து நின்ற வரலாரே இருக்கின்றது
0 comments:
Post a Comment