சம்மாந்துறை, அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் தேவைக்காக இலவச இரத்ததான நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் சிறாஜ் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளியிலுள்ள ஒரேஞ் தேயிலைக் கம்பனியின் முழு அனுசரணையுடன் இவ் இரத்ததான நிகழ்வு நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக மனித உரிமைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளாரும் ஜனாதிபதி கூட்டிணைப்பு அதிகாரியுமான சட்டத்தரணி கலாநிதி எம்.என்.எம்.அஸீம், கல்முனை சுபத்திராம விகாராதிபதி சிறி ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர், ஒரேஞ் கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்.நாஸர், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், இரத்த வங்கி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் யூ.எல்.எம்.ஜின்னாஹ், ஒரேஞ் தேயிலைக் கம்பனியின் ஸ்தாபகர் பீ.ஜே.அஹமத், கல்முனை சாஹிறா கல்லூரி அதிபர் ஆதம்பாவா, கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் கலந்தகொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதிலும் விசேடமாக ஒரேஞ் கம்பனியின் பெரும்பாலான ஊழியர்கள் இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு விசேட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.TM
0 comments:
Post a Comment