(ஹனீபா)
யாழ்பாண நகரிலுள்ள கோட்டை பலகோடி ரூபா செலவில் அரசினால் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகினறன.
போத்துக் கேயரினால் இலங்கையின் வடபகுதியில் தமது பெயரை நிலைநாட்டும் நோக்கில்; 1619ம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையினை சதுர வடிவம் கொண்டதாக நிறுவினர்.
1658ம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இக் கோட்டை கைப்பற்றப்பட்டு அவை இடிக்கப்பட்டு மீண்டும் கி.பி 1665 தொடக்கம் 1680 காலப்பகுதியில் தற்பொது காணப்படும் ஐந்து பக்கங்கள் கொண்ட நச்சத்திர வடிவிலான கோட்டை உருவாக்கப்பட்டு 1792 கட்டுமானப்பணிகள் யாவும் நிறைவு பெற்றது.
பின்னர் இக் கோட்டை 1795ம் ஆண்டு எந்தவித போராட்டமும் இன்றி ஆங்கிலேயர் வசமானது 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர் வசமே இக் கோட்டை காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இக்கோட்டை கடந்த கால யுத்தத்தின் போது பீராங்கித் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
இக்கோட்டையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தின்; பல கோடிக்கண்ககான ரூபா செலவில் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது.
நாட்டில் சமாதான சூழ் நிலை உருவாக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இந்தக் கோட்டையினை பார்வையிடவதற்காக வருகை தந்து கொண்டிருக்கின.
0 comments:
Post a Comment