வடக்குத் தேர்தலை பிற்போடுவதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற முயற்சி : ஐ.தே.க.
வட மாகாணத்தின் வாக்காளர் இடாப்பில் குழப்பம் உள்ளதாக தெரிவித்து
வடக்குத் தேர்தலை பிற்போடுவதற்கான நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெறுவதற்கு
அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது. வடக்குத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற
அச்சத்தினாலேயே அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிலரைக் கொண்டு இவ்வாறு
வடக்குத் தேர்தலை பிற்போடுவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற அரசாங்கம்
முயற்சிக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
13 ஆவது
திருத்தச் சட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தாமல் வடக்குத் தேர்தலை
அரசாங்கம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். வடக்குத் தேர்தலை
நடத்தாமல் அதனை ஒத்திவைத்தால் சர்வதேச ரீதியில் எமது நற்பெயருக்கு களங்கம்
ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
இவ்வருடம்
செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு தேர்தலை நடத்துவதாக
அரசாங்கமே உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கு உறுதியளித்தது. இந்தியாவுக்கும்
ஐக்கிய நாடுகள் சபைக்கும் இந்த உறுதியை ஜனாதிபதியும் வெளிவிவகார
அமைச்சரும் அளித்தனர்.
ஆனால் தற்போது வடக்குத் தேர்தலை நடத்தினால் அ
ரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச
தெரிவித்துள்ளார். அது அவரைப் பொறுத்த விடயமாகும். ஆனால் தற்போது அமைச்சர்
விமல் வீரவங்க உள்ளிட்டோரைக் கொண்டு வடக்குத் தேர்தலை பிற்போடுவதற்கான
நீதிமன்ற உத்தரவை பெற அரசாங்கம் முயற்சிக்கின்றதாகவே தெரிகின்றது.
அதாவது
வட மாகாணத்தின் வாக்காளர் இடாப்பில் குழப்பம் உள்ளதாக தெரிவித்தே வடக்குத்
தேர்தலை பிற்போடுவதற்கான நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெறுவதற்கு அரசாங்கம்
சூழ்ச்சி செய்கின்றது. இந்த விடயத்தில் அமைச்சர் வீரவங்ச ஒரு நடிகர்
மட்டுமேயாவார். மாறாக இயக்குனர் அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கின்றார்.
இன்று
சர்வதேசம் எம்மை வித்தியாசமான நோக்கிலேயே பார்க்கின்றது. 2009 ஆம் ஆண்டு
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் எமக்கு 29 நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் 2012
ஆம் ஆண்டு எம்மை 13 நாடுகளே ஆதரித்தன. அந்த வகையில் தற்போது அரசாங்கம்
மேற்கொள்ளும் நடவடிக்ககைள் காரணமாக மேலும் சர்வதேச ரீதியில் நெருக்கடிகள்
ஏற்படலாம்.
தற்போது அரசாங்கம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை
நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலை நடத்தினால் அதில் கூட்டமைப்பு போட்டியிடுமா
என்பதே கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இந்நிலையில் 13 ஆவது திருத்தச்
சட்டத்தில் எந்தப் சிக்கலையும் மேற்கொள்ளாமல் இதனைச் செய்யவேண்டும் என்று
கோருகின்றோம்.
மேலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து
அரசாங்கம் எடுக்கப்போகின்ற நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தால்
அதற்கு நாங்கள் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என அவர் மேலும்
தெரிவித்தார்.
Bas VI
0 comments:
Post a Comment