இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

சச்சின் உருவம் பதித்த தங்கக் காசுகள் வெளியீடு


அட்சயதிரிதியையை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கரின் உருவம் பதித்த தங்கக் காசுகள் இன்று மும்பையில் வெளியிடப்பட்டன. 

அந்த தங்கக் காசில் சச்சின் முகத்துடன் அவரது ஆட்டோகிராபும் இடம் பெற்றிருப்பது விசேஷமாகும். வேல்யூமார்ட் கோல்ட் மற்றும் ஜுவல்ஸ் என்ற நிறுவனம் இந்த தங்கக் காசுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. 

ஒவ்வொரு காசும் 10 கிராம் எடை கொண்டதாகும். மொத்தம் ஒரு இலட்சம் தங்கக் காசுகள் முதல் கட்டமாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. 

மும்பையில் இன்று நடந்த விழாவில், சச்சின் முன்னிலையில் இந்த தங்கக் காசுகள் வெளியிடப்பட்டன. 

24 காரட் தரத்திலான இந்த தங்க நாணயத்தின் ஒரு காசு ரூ. 34,000 ஆகும். வேல்யூமார்ட்கோல்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த காசுகள் விற்பனைக்கு கிடைக்கும். 

மேலும் முன்னணி நகைக் கடைகளிலும் இதை பெறலாம். வேல்யூ மார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராகவும் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பொறுப்பில் இருப்பார். 

நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில்,பல தங்கமான நினைவுகள் எனக்கு கிரிக்கெட் களத்தில் கிடைத்துள்ளன. அவையெல்லாம் அபாரமானவை. அரியவை. அட்சயதிரிதியை தினமானது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வர உதவும். 

தங்கத்தைப் பார்த்தால் எனக்கே தங்கம் வாங்க வேண்டும் போல இருக்கிறது. சின்னதாக ஒரு தங்கச் சங்கிலியை கழுத்தில் போட்டுக் கொள்ள ஆசை வருகிறது. 

டீன் ஏஜ் வயதில் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் செயின் போட்டுள்ளேன் என்றார் சச்சின்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா