இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தில்,ஆங்கில நுலகப் பிரிவு திறப்பு Photos


(ஹனீபா,சியாட்)
ஆங்கில மொழி மூலம் கல்வி பயிலும் மாணவர்களின் வசதி கருதி அவர்களது அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வெள்நாட்டு உயர் ஸ்தானிகாருமான திருமதி பேரியல் இஸ்மாயீல் அஷ;ரப் அவர்களின் முயற்சியினால் கெண்டல் எய்ட் சிறி லங்கா நிறுவணத்தினால் வழங்கப்பட்ட பொருந் தொகையான ஆங்கில நூல்களையும் சகல வசதிகளும் கொண்ட விஷேட ஆங்கில நுலகம் இன்று (13) சம்மாந்துறை அமீர்அலி பொது நூலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், தேசியப்பாடசாலையின் அதிபர் எஸ்.அபூபக்கர், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.எம்.சஹீட், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா