இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தில் கௌரவிப்பு விழா Photos


(ஹனீபா)
சிறந்த ஆளுமை, முகாமைத்துவம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி போன்றனவற்றைக் கொண்டு செயற்படும் ஒரு மனிதனால் மட்டுமே ஒரு நிறுவனத்தை சிறந்ததொரு நிலைக்கு கட்டியெழுப்ப முடியும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று (08) நடைபெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,2009ம் ஆண்டு இப்பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரம் கொண்டுவரப்பட்போது அச்சமான நிலை காணப்பட்டது. ஏனெனில் இங்கு போதுமான ஆசிரியர்கள் மற்றும் ஏனைய வளங்கள் இல்லாமையே ஆகும். ஆனால் அதிபர் சிறந்த ஆளுமைமிக்கவராக இருந்து செயற்பட்டமையினால் இங்குள்ள ஆசிரியர்;கள், பெற்றோர்கள் பாடசாலை சமூகம் நல்லதொரு கூட்டுப் பொறுப்புடனான செயற்பாடுகளைக் மேற் கொண்டமையினாலும் இன்று பல சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பது ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமையும்,

மாணவர்களாகியவர்கள் எமது பிரதேசத்தின் பயிர்கள். நாம் ஒவ்வொருவரும் அவற்றின் காவலாளிகள், இன்று இப்பெறுபேறுகள் சொல்லுகின்றன நாம் சரியையே செய்கின்றோம் என்று. மாணவர்கள் எஜமான்கள். நாம் இன்று கானும் கனவுகளை மெய்ப்பிக்கப்பிறந்தவர்கள் நாம் நாளை மறைந்து போகலாம். நமது வரலாறுகளையும், பாரம் பரியங்களையும் தூக்கி சுமந்து செல்லக் கூடியவர்கள் நமது பிள்ளைகளே. எனவே மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய பொறுப்பில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்;.

இந்த வைபவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சீல்,வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்எம்.காசீம், கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி, பிரதேச சபை உறுப்பினர் எம்.முனாப் உற்பட ஆசிரியர்கள் மற்றும் பொற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா