(சமூன் முகைதீன்)
இனங்களுக்கிடையலான வெறுப்புணர்வை தூண்டுதலுக்கு எதிராக உறுதியாகவும் ஒன்றிணைந்தும் இனங்களுக்கிடையிலான பல்வகைமை மற்றும் ஒருமைப்பாடு பற்றிய புரிந்துணர்வை வளர்ப்பதற்கான எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் செயலணி.
தற்போது பொதுவாக சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு மிக வேகமாக பரவிவரும் இனத்துவேசம் மற்றும் ஒதுக்குதலுக்கு எதிராக பல்வேறு பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் இணைந்ததான நாட்டு நலனில் அக்கறை கொண்ட இலங்கையர்கள் தொண்டரணி ஒன்றினூடாக தொடரான, கட்சி சார்பற்ற, சாத்வீக ரீதியிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இத்தகையதொரு நிகழ்வுதான் ஜூலை 07ம் ஞாயிற்றுகிழமை காலை 11.30 மணிக்கு மாத்தறை நகரத்தில் நடைபெறும் 'ஒருமைப்பாட்டுக்கான பேரணி – இலங்கையில் பகைமைக்கு இடமில்லை'
அத்துடன் இது இந்நாட்டில் அமைதியாக இருக்கும் பெரும்பாலான நடுநிலை வகிக்கும் மக்கள் ஒருங்கிணைந்து தங்கள் குரலை வெறுக்கத்தக்க நிகழ்வுகளுக்கு எதிராக எழுந்து நிற்க வலுவை வழங்கும் எனவும் திடமாக நம்புகிறோம்.
இந்நிகழ்வை கட்சி சார்பற்று, அமைப்பு சார்பற்று வேறுபாடுகளுக்கு அப்பால் நடாத்துவதற்காக உங்கள் அமைப்பு சார் அடையாள குறியீடுகளை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கை நாட்டின் பல்வகைமையை மதித்து தழுவிக்கொள்ள தங்கள் அனைவரது உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.
RallyForUnity







0 comments:
Post a Comment