(ஹனீபா)
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (25.06.2013) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ்; தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதஉல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சிரேஷ;ட அமைச்சர் பீ.தயரத்ன,பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சிறியாணி விஜய விக்ரம, பீ.எச்.பியசேன, அனோமா கமகே, மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர, நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள் அதன் உறுப்பினர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறப்பினர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களினதும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் திணைக்கள வாரியாக தனி;த்தனியாக ஆராயப்பட்டு முடிவுகள் மெற்கொள்ளப்பட்டன.









0 comments:
Post a Comment